மீனவர்கள் பிரச்சனையை இரண்டு நாளில் தீர்க்காவிட்டால் மீனவர்களை திரட்டி திமுக சார்பில் போராட்டம் நடத்துவோம் என்று திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவரது முக நூலில் கூறி இருப்பதாவது:
காவல்துறை அராஜகத்திற்கு உள்ளான மீனவ பெருமக்களை சந்தித்து பேசினேன். நடுக்குப்பம், மாடங்குப்பம், அயோத்திக்குப்பம் மீனவர்கள் மிகுந்த சோகத்திலும் அதிர்ச்சியிலும் உள்ளார்கள் என்பதை அறிந்தேன்.

காவல்துறை தாக்குதலில் காயமடைந்தவர்களுக்கு உணவு கொடுத்ததற்காக மீனவர்கள் தாக்கப்பட்டு, அவர்களின் மீன் கடைகள் எல்லாம் தீக்கிரைக்கப்பட்டுள்ளது பார்க்க வேதனையாக இருக்கிறது.

அவர்களின் இரு சக்கர வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டுள்ளன. கண்ணீரும் கம்பலையுமாக உள்ள அந்த மீனவ மக்கள் பெரும் அச்சத்தில் வாழ்கிறார்கள்.
அங்கு பத்திரிகை நிருபர்கள் சந்தித்த போது, " மாணவர்கள் போராட்டத்தில் சமூக விரோதிகள், தேச விரோதிகள் நுழைந்து விட்டார்கள் என்று சட்டமன்றத்தில் நான் எழுப்பிய பிரச்சனைக்கு பதிலளித்தார்.

அப்படி என்றால் உளவுத்துறை என்ன செய்தது? அது உண்மை என்றால் கைது செய்திருக்க வேண்டியது தானே? இப்போது இது மாதிரி கூறுவதே கையாலாகாத அரசு என்றே அர்த்தம்.
ஆகவே ப
ணியில் இருக்கும் உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் உடனடியாக விசாரணை கமிஷன் அமைக்க வேண்டும்" என்று கூறினேன்.

இன்னும் இரு தினங்களுக்குள் பாதிக்கப்பட்டுள்ள மீனவ மக்களின் பிரச்சனைகளை அரசு தீர்த்து வைக்க வில்லை என்றால் மீனவ மக்களை எல்லாம் ஒன்று திரட்டி திங்கள்கிழமை திமுக சார்பில் மாபெரும் போராட்டம் நடத்தப்படும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
