Asianet News TamilAsianet News Tamil

ஜெயலலிதாவை மிஞ்சிய எடப்பாடி & பன்னீர்!! பக்கா ஸ்கெட்ச்சில் வந்து விழுந்த பாமக!! ப்ப்பா என்ன பிளான்...

தகுதி நீக்கம் செய்யப்பட்டு, காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்ட தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் நிபந்தனையற்ற ஆதரவு தர முன்வந்ததால் பாமகவுக்கு 7 லோக்சபா தொகுதிகள் மற்றும் ஒரு ராஜ்யசபா  பதவியை அதிமுக வாரி வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

PMK support ADMK Master plan
Author
Chennai, First Published Feb 20, 2019, 7:42 PM IST

தமிழக சட்டசபையில் MLAக்கள் தகுதி நீக்கம் தகுதியிழப்பு மறைவு போன்ற காரணங்களால் 21 சட்டசபை தொகுதிகள் காலியாக உள்ளன. தற்போதைய நிலவரப்படி அதிமுகவிற்கு 115, திமுகவிற்கு 88, காங்கிரசுக்கு 8, முஸ்லிம் லீக் மற்றும் சுயேச்சைக்கு தலா 1 MLAக்கள் உள்ளனர். 

தற்போதுள்ள அதிமுக  MLAக்களில் 3 பேர் டிடிவி தினகரன் ஆதரவாளர்களாக உள்ளனர். வேறு கட்சிகளை சேர்ந்த இரண்டு MLAக்கள் எப்போது வேண்டுமானாலும் அணி மாறக்கூடிய அபாயமும் உள்ளது.

இந்த சூழ்நிலையில் காலியாக உள்ள 21 சட்டசபை தொகுதிகளுக்கு நாடாளுமன்றத் தேர்தலுடன் இணைத்து இடைத்தேர்தல் நடத்தப்படலாம் என தகவல் வெளியாகி உள்ளது. அவ்வாறு இடைத்தேர்தல் நடத்தப்பட்டால் அதிமுக ஆட்சியை தக்கவைக்க எட்டு தொகுதிகளில் வெற்றி பெற்றாக வேண்டிய கட்டாயம் உள்ளது. இடைத்தேர்தலில் அதிமுகவை தோல்வி அடையச் செய்து ஆட்சியை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்பதில் திமுக மற்றும் அமமுக கட்சிகள் தீவிரமாக உள்ளன.

PMK support ADMK Master plan

இந்நிலையில் அதிமுக  சார்பில் லோக்சபா கூட்டணி பேச்சுவார்த்தை நடந்தது. கூட்டணியில் பிஜேபி - பாமக - அதிமுக , புதிய தமிழகம், புதிய நீதிக்கட்சி, இந்திய ஜனநாயக கட்சி போன்றவை இடம்பெறுவது உறுதியாகி உள்ளது. இக்கூட்டணியை நாடாளுமன்ற தேர்தலுக்கு மட்டுமின்றி சட்டசபை இடைத்தேர்தலுக்கும் பயன்படுத்த அதிமுக முடிவு செய்தது.

இதன் காரணமாக பாமக உடன் நடந்த பேச்சு வார்த்தையில் '21 சட்டசபை தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்தப்படும்போது நிபந்தனை யற்ற ஆதரவு தர வேண்டும்' என அதிமுக 

சார்பில் வலியுறுத்தப்பட்டது; அதை பாமக ஏற்றது. அதற்கு பிரதிபலனாக ஏழு நாடாளுமன்ற தொகுதிகள் மற்றும் ஒரு ராஜ்யசபா பதவியை பாமக கேட்டது.

PMK support ADMK Master plan

அதைத் தொடர்ந்து பாமக கேட்ட தொகுதிகளை அதிமுக  ஒதுக்கியது. ஏனெனில் இடைத்தேர்தல் நடக்க உள்ள பெரம்பூர், திருப்போரூர், பூந்தமல்லி, பாப்பிரெட்டிபட்டி, அரூர், குடியாத்தம், சோளிங்கர், ஆம்பூர் ஆகிய தொகுதிகள் வட மாவட்டத்தில் வருகின்றன. 

இங்கு பாமகவிற்கு தனி ஓட்டு வங்கி உள்ளது. பாமக ஆதரவுடன் போட்டியிட்டால் எளிதாக வெற்றி பெற்று விடலாம். ஆட்சியை பெரும்பான்மை பலத்துடன் 2021 வரை நடத்த முடியும் என்ற நம்பிக்கையில் இந்த உடன்பாட்டை அதிமுக  தலைமை செய்துள்ளது.

தமிழகத்தில் அரசுக்கு எவ்வித ஆபத்தும் ஏற்பட்டு விடக் கூடாது என்ற முன்னெச்செரிக்கையுடன் சட்டசபை இடைத்தேர்தலுக்கான ஆதரவை கூட்டணி கட்சிகளிடம் அதிமுக உறுதிப்படுத்தி உள்ளது. (பெரம்பூர், திருப்போரூர், பூந்தமல்லி, பாப்பிரெட்டிபட்டி அரூர், குடியாத்தம் சோளிங்கர் ஆம்பூர். அரவக்குறிச்சி, தஞ்சாவூர், திருவாரூர்; நிலக்கோட்டை; ஒட்டப்பிடாரம் விளாத்திகுளம்; பெரியகுளம் ஆண்டிப்பட்டி; பரமக்குடி; சாத்துார்; மானாமதுரை, திருப்பரங்குன்றம்; ஓசூர்)

PMK support ADMK Master plan

10 ஆண்டுகளுக்கு பின் அதிமுக கூட்டணியில் பாமக இணைந்துள்ளது.சென்னையிலுள்ள ஒரு ஸ்டார் ஓட்டலுக்கு காலை 10:30 மணிக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி ஆகியோர் வந்தனர். அவர்களுடன் அமைச்சர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் வந்தனர்.

காலை 11:00 மணிக்கு ராமதாஸ், அவரது மகன் அன்புமணி ஆகியோர் வந்தனர். அவர்களுடன் ஜி.கே.மணி, ஏ.கே.மூர்த்தி ஆகியோரும் வந்தனர். ராமதாஸ், அன்புமணி ஆகியோரை சால்வை அணிவித்து முதல்வரும் துணை முதல்வரும் வரவேற்றனர்.

அதன்பின் இரு தரப்புக்கும் இடையே பேச்சு வார்த்தை துவங்கியது. பேச்சுவார்த்தை முடி வில் பாமகவிற்கு ஏழு லோக்சபா தொகுதி களும், ஒரு ராஜ்யசபா சீட்டும் தர அதிமுக சம்மதம் தெரிவித்தது. காலியாக உள்ள சட்ட சபை தொகுதிகளுக்கான இடைத் தேர்தலில் அதிமுகவிற்கு நிபந்தனை யற்ற ஆதரவு தர பாமக சம்மதம் தெரிவித்தது. 

அதைதொடர்ந்து அதிமுக - பாமக இடையே தொகுதி உடன்பாடு ஏற்பட்டது. இதற்கான ஒப்பந்தத்தில் அதிமுக சார்பில் பன்னீர் செல்வம், பழனிசாமி ஆகியோரும் பாமக சார்பில் ராமதாஸ், ஜி.கே.மணி ஆகியோரும் கையெழுத்திட்டனர்.

PMK support ADMK Master plan

கடந்த 2009 தேர்தலில் அதிமுக கூட்டணி யில் பாமக இடம்பெற்றது. அப்போது அக் கட்சிக்கு ஆறு தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. அனைத்திலும் அக்கட்சி தோல்வியை தழுவி யது. பத்து ஆண்டுகளுக்கு பின் மீண்டும் அதிமுக கூட்டணியில் பாமக இணைந்துள்ளது.

அதிமுக - பாமக கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தான பின் அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் கூறியதாவது; பாமகவுடன் இணைந்து மெகா கூட்டணியாக வெற்றி கூட்டணி அமைத்து தமிழகத்திலும் புதுவையிலும் தேர்தலை சந்திப்பது என்று நல்ல முடிவு எடுக்கப்பட்டு உள்ளது. அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாமகவிற்கு ஏழு லோக்சபா தொகுதிகள் ஒதுக்கப்படும். அத்துடன் 2019ல் ஒரு ராஜ்யசபா இடம் ஒதுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் தற்போது காலியாக உள்ள 21 சட்டசபை தொகுதிகளுக்கான இடைத் தேர்த லில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு பாமக தனது முழு ஆதரவை அளிக்கும் என இவ்வாறு அவர் கூறினார்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios