Asianet News TamilAsianet News Tamil

பாமக போட்டியிடும் 6 தொகுதிகள் முடிவு !! ஒண்ணே ஒண்ணு மட்டும் சீக்கிரம் முடிவாயிடும்… ராமதாஸ் அதிரடி அறிவிப்பு !!

அதிமுக கூட்டணியில் பாமக போட்டியிடும் 6 தொகுதிகள் எவை ? எவை ? என முடிவாகிவிட்டதாகவும், இன்னும் ஒரு தொகுதி மட்டும் ஓரிரு நாளில் முடிவாகிவிடும் என்றும் பாமக ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
 

pmk ramadoss  told about 6 constituency
Author
Tindivanam, First Published Feb 24, 2019, 9:29 AM IST

நாடாளுமன்ற தேர்தலையொட்டி அரசியல் களம் அனல் பறக்கிறது. தேர்தல் கூட்டணி, தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை என அரசியல் கட்சிகள் களத்தில் வேகமாக காய் நகர்த்தி வருகின்றனர். தற்போது வரை அ.தி.மு.க. கூட்டணியில் பா.ஜ.க.வுக்கு 5 தொகுதிகளும், பா.ம.க.வுக்கு 7 தொகுதிகள் மற்றும் டெல்

லி மேல் சபையில் ஒரு இடமும்  என பேசி முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், புதுச்சேரி தொகுதி என்.ஆர். காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்தநிலையில் அ.தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க.வை இழுப்பதற்கு பல்வேறு கட்டங்களாக பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.

pmk ramadoss  told about 6 constituency

அதேபோல் தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை முடிந்து இருக்கிறது. இந்த 2 பிரதான கட்சிகளும் தங்களுடைய கூட்டணியில் மேலும் சில கட்சிகளை இணைப்பதில் தீவிரம் காட்டி வருகின்றனர்.

pmk ramadoss  told about 6 constituency

இந்த பரபரப்பான சூழ்நிலையில் பாமகவுக்கு ஒதுக்கப்பட்ட 7 இடங்களில் 6 அடங்கள் எது ? எது ? என முடிவாகிவிட்டதாகவும் எந்தெந்த தொகுதிகள் முடிவாகி இருக்கின்றன? என்பது குறித்து பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறினார்.

அ.தி.மு.க. கூட்டணியில் பா.ம.க.வுக்கு 7 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. அதில் 6 தொகுதிகள் எவை? எவை? என்பது முடிவாகிவிட்டன என்றும் . மீதமுள்ள ஒரு தொகுதியும் இன்னும் ஓரிரு நாட்களில் முடிவாகிவிடும் என்றும் ராமதாஸ் தெரிவித்தார்,.
 

Follow Us:
Download App:
  • android
  • ios