Asianet News TamilAsianet News Tamil

அம்பேத்கர் படம்போட்ட சட்டையுடன் மாணவிக்கு பாலியல் இச்சை... பாமக ராமதாஸ் கடும் ஆத்திரம்..!

மாணவியை தவறாக படம் பிடித்து பாலியல் இச்சைக்கு இணங்கும்படி அச்சுறுத்திய அதே பகுதியைச் சேர்ந்த 3 இளைஞர்கள் மன்னிக்கப்படக் கூடாதவர்கள்.

PMK Ramadoss rage
Author
Tamil Nadu, First Published Jun 17, 2020, 1:55 PM IST

வேலூர், பாகயம் அருகே ஒரு கிராமத்தைச் சேர்ந்த 15 வயது சிறுமி, 11 ஆம் வகுப்பு பள்ளியில் படித்து வந்தாள். இந்த சம்பவம் நடக்கும் முன் அவரது தந்தையின் செல்போன் எண்ணில் வந்த அழைப்பை பள்ளி மாணவி எடுத்துள்ளார். எதிர் பக்கத்தில் பேசிய நபர் வாட்ஸ்அப்பில் வீடியோ ஒன்றை அனுப்பியுள்ளதாகவும், அதை பார்க்கும்படி  சிறுமியிடம் கூறி அழைப்பைத் துண்டிக்கப்பட்டுள்ளது.

PMK Ramadoss rage

வீடியோவை பதிவிறக்கம் செய்த மாணவி, வீட்டின் பின்புறம் உள்ள தேங்காய் கொட்டகை குளியலறையில் குளிக்கும் போது யாரோ செல்போன் கேமராவில் வீடியோவை படமாக்கியதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். மீண்டும், பிளாக்மெயில் கும்பல் செல்போன் மூலம் தொடர்பு கொண்டு, அந்த வீடியோவை அவர்கள் கொடுக்க வேண்டிய இடத்திற்கு வருமாறு சிறுமியை அழைத்துள்ளனர். வீடியோவை திரும்பப் பெறச் சென்ற மாணவியை 17 வயது சிறுவன் உட்பட மூன்று மாணவர்கள் பாலியல் வன்கொடுமை செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தப்பிச் சென்ற சிறுமியை மீண்டும் மொபைல் போன் மூலம் மிரட்டிய கும்பல், வீடியோவைத் திருப்பித் தர 5000 ரூபாயைக் கேட்டுள்ளனர். கேட்ட பணத்தை கொடுக்காவிட்டால், அந்த வீடியோ வாட்ஸ்அப் மற்றும் மற்ற சமூக வலைத்தளங்களில் பகிரப்படும் என மிரட்டியுள்ளனர். கடும் மன உளைச்சலுக்கு ஆளான சிறுமி, சனிக்கிழமை வீட்டில் யாரும் இல்லாதபோது அவரது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக்கொண்டார். PMK Ramadoss rage

இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள பாமக நிறுவனர் ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘’வேலூர் அருகே 3 மனித மிருகங்களால் பாலியல் அச்சுறுத்தலுக்கு ஆளாகி தீக்குளித்த 11ஆம் வகுப்பு மாணவி உயிரிழந்தார் என்ற செய்தி மிகுந்த வேதனை அளிக்கிறது. மாணவியின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

மாணவியை தவறாக படம் பிடித்து பாலியல் இச்சைக்கு இணங்கும்படி அச்சுறுத்திய அதே பகுதியைச் சேர்ந்த 3 இளைஞர்கள் மன்னிக்கப்படக் கூடாதவர்கள். மிருகங்களுக்கு இணையான அவர்களுக்கு மிகக்கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும். அது மற்றவர்களுக்கு பாடமாக அமைய வேண்டும்’’ எனக் கேட்டுக் கொண்டுள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios