லண்டன் சென்றுள்ள முதல்வர் எடப்பாடி பழனிசாமியில் செயல்பாடுகளை பாமக நிறுவனர் ராமதாஸ் புகழ்ந்து தள்ளியுள்ளார். 

14 நாட்கள் பயணமாக வெளிநாடு சென்றுள்ள எடப்பாடி பழனிசாமி நேற்று லண்டனில் இரு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டார்.  அடுத்து கிங்ஸ் மருத்துவமனையின் கிளையை தமிழகத்தில் கொண்டுவரவும் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

இந்நிலையில், இதனை பாராட்டி தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ள பாமக நிறுவனர் ராமதாஸ், ’’உலகின் தலைசிறந்த மருத்துவ சுற்றுலா மையங்களில் ஒன்றாக திகழும் தமிழ்நாட்டிற்கு கிங்ஸ் மருத்துவமனையின் கிளையும் வந்தால் மேலும் புகழ் சேர்க்கும். லண்டனில் வழங்கப்படுவது போன்று தமிழகத்திலும் ஏழைகளுக்கு குறைந்த கட்டணத்திலும், குழந்தைகளுக்கு இலவசமாகவும் சிகிச்சை அளிக்கப்பட்டால் சிறப்பு.

உலகப்புகழ் பெற்ற லண்டன் கிங்ஸ் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் கிளையை தமிழகத்தில் அமைப்பதற்கான ஒப்பந்தம் எடப்பாடி பழனிச்சாமி முன்னிலையில் கையெழுத்தாகி இருப்பது பாராட்டத்தக்கது. முதலமைச்சரின் வெளிநாட்டு பயணம் பயனுள்ளது என்பதற்கு இது ஓர் எடுத்துக்காட்டு’’ என அவர் பாராட்டி தள்ளியுள்ளார்.