Asianet News TamilAsianet News Tamil

டெல்லி கூட்டணியில் பாமக உள்ளது; தமிழ்நாடு கூட்டணியில் பாமக இல்லை - அன்புமணி விளக்கம்

டெல்லியில் தேசிய ஜனநாயக கூட்டணியில் பாமக அங்கம் வகிக்கிறது. ஆனால், தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயக கூட்டணியில் பாமக அங்கம் வகிக்கவில்லை என மதுரையில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

pmk president anbumani ramadoss explain about alliance in madurai
Author
First Published Aug 5, 2023, 9:43 AM IST

நெய்வேலி என்.எல்.சி முன்பாக பாட்டாளி மக்கள் கட்சி நடத்திய போராட்டத்தில் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் நீதிமன்ற காவலில்  வைக்கப்பட்டுள்ள பாட்டாளி மக்கள் கட்சியை சேர்ந்த 18 பேரை அக்கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ் சந்தித்து பேசினார். பின்னர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில் "மண்ணுக்கும், மக்களுக்குமாக போராடிய பாகமவை சேர்ந்த 55 பேரை காவல்துறை கைது செய்துள்ளது, கைது செய்யப்பட்ட பாமகவினரை விடுவிக்க வேண்டும், என்.எல்.சி க்காக தமிழக அரசு நிலங்களை கையகப்படுத்த கூடாது, என்.எல்.சி நிலக்கரி எடுத்த பின்னர் நிலங்களை அழித்து வருகிறது.

 தமிழகத்தில் இனி நிலக்கரி சுரங்கம் அமைக்கப்படாது என முதல்வர் 3 மாதங்களுக்கு முன் அறிவித்தார், 3 போகம் விளையும் விலை நிலங்கள் அழிக்கப்பட்டு வருகின்றது, என்.எல்.சி 3 ஆம் சுரங்கம் அமையுமா? அல்லது அமையாதா? என தமிழக அரசு தெளிவுபடுத்த வேண்டும். என்.எல்.சி பிரச்சினை தமிழக மக்களின் பிரச்சினை, விளை நிலங்களை தமிழக அரசு பாதுகாக்க வேண்டும். தமிழ்நாடு மின்மிகை மாநிலமாக மாறியுள்ளது. என்.எல்.சி மின்சாரத்தை வெளி மாநிலங்களுக்கு விற்பனை செய்கிறது. என்.எல்.சி நிறுவனத்துக்கு தமிழக அரசு ஏன் உதவியாக உள்ளது என தெரியவில்லை. 

தனியார் பேருந்தில் இருந்து தவறி விழுந்த முதியவர் உயிரிழப்பு; சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பு

பாமக அரசியல் நோக்குடன் போராட்டம் நடத்தவில்லை, மண்ணுக்கும், மக்களுக்கும் பிரச்சினை என்றால் பாமக போராடும். ராகுல்காந்திக்கு வழங்கப்பட்ட தண்டனை மிகப்பெரிய தண்டனை. சாதாரண வழக்கில் ராகுல்காந்திக்கு தண்டனை வழங்கப்பட்டது. ராகுல்காந்தி வழக்கில் தீர்ப்பு விபரம் தெரியவில்லை. தீர்ப்பின் விபரம் கிடைத்தவுடன் பேசுகிறேன். டெல்லியில் தேசிய ஜனநாயக கூட்டணியில் பாமக அங்கம் வகிக்கிறது. தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயக கூட்டணியில் பாமக அங்கம் வகிக்கவில்லை. 2026ல் பாமக ஒரு மித்த கருத்துடன் உள்ள கட்சிகளுடன் தேர்தலை சந்திக்கும். அமலாக்கத்துத்துறை சட்டத்துக்கு உட்பட்டு செயல்பட வேண்டும்" என கூறினார்.

யானைகள் முகாம்: இன்றும் சுருளி அருவியில் குளிக்க தடை; சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்

Follow Us:
Download App:
  • android
  • ios