4 ஆவது முறையாக அதிமுக உடன் பாமக கூட்டணி..! தெரியுமா  உங்களுக்கு...

நேற்று அதிமுகவுடன் பாமக மற்றும் பாஜக கூட்டணி உறுதியானது. அதன்படி பாமகவிற்கு 7 தொகுதிகளும் பாஜகவிற்கு 5 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டுள்ளது.

வரும் மே மாதம் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளதால் தேர்தல் பரப்புரை மற்றும் கூட்டணி கட்சிகள் குறித்து மும்முரமாக செயல்பட்டு வருகின்றது பல்வேறு கட்சிகள். தமிழகத்தை பொருத்தவரை அதிமுக தலைமையில் கூட்டணி கட்சிகள் யார் யார் என்பதையும், திமுக தலைமையில் கூட்டணி வைக்க உள்ள கட்சிகள் யார் என்பது குறித்தும் மும்முரமாக பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் அதிமுக தலைமையில் பாஜக மற்றும் பாமகவுடன் கூட்டணி உறுதியாகி உள்ளது.

அதிமுகவுடன் பாமக கூட்டணி வைப்பதற்குமுன்பாக திமுகவுடன் இது குறித்த பேச்சுவார்த்தை இருந்து வந்தது. ஆனால் முடிவில் அதிமுக கூட்டணியே உறுதியானது என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் இதற்கு முன்னதாக எப்போதெல்லாம் அதிமுக பாமக கூட்டணி வைத்திருந்தனர் என்பதை பார்க்கலாம்.

கடந்த 1998ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் இடம்பெற்ற பாமகவிற்கு ஐந்து இடங்கள் ஒதுக்கப்பட்டது. அதேபோன்று 2001ஆம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாமக இடம்பெற்று அப்போதைக்கு 27 இடங்கள் ஒதுக்கப்பட்டு 20 இடங்கள் வெற்றியும் கண்டது.

அதன்பின்பு 2009ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் இணைந்த பாமகவிற்கு 6 தொகுதி ஒதுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. பின்னர் அதன் பின்னர் அதிமுக கூட்டணியில் பாமக இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் 4 ஆவது முறையாக வரும் நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் இந்த நேரத்தில் அதிமுகவுடன் கூட்டணி வைத்துள்ளது பாமக என்பது குறிப்பிடத்தக்கது. இந்த முறை பாமக விற்கு 7 தொகுதிகளை ஒதுக்கி உள்ளது அதிமுக..