ஆபத்து வந்தா எல்லாரும் ரஜினி மாதிரி தாய்மொழியில் தான் கத்துவாங்க!! ரஜினியை வச்சு செய்யும் ராமதாஸ்
பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடித்த காலா திரைப்படம் இன்று வெளியாகி ஓடிக்கொண்டிருக்கிறது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட வேண்டும் என ரஜினி கருத்து தெரிவித்ததால், ரஜினியின் காலா திரைப்படத்தை கர்நாடகாவில் வெளியிட கன்னட அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். கர்நாடகாவில் காலா வெளியாகவில்லை.
இதற்கிடையே காலா திரைப்படத்தை கர்நாடகாவில் திரையிடுவதற்கான எதிர்ப்பு தொடர்பாக பேசிய ரஜினிகாந்த், காலா திரைப்படத்தை கர்நாடகாவில் திரையிட எதிர்ப்பு தெரிவிப்பது கர்நாடகாவிற்கு நல்லதல்ல என தெரிவித்திருந்தார். மேலும் கர்நாடகாவில் காலாவை திரையிட ஒத்துழக்க வேண்டும் என கன்னடத்தில் கோரிக்கை விடுத்தார்.
ரஜினி கன்னடத்தில் கோரிக்கை விடுத்ததை பாமக நிறுவனர் ராமதாஸ் கிண்டலடித்துள்ளார். இதுதொடர்பாக தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள ராமதாஸ், ரஜினி கன்னடத்தில் வேண்டுகோள் விடுத்த செய்தியை சுட்டிக்காட்டி, ஆபத்து வந்தால் தாய்மொழியில் தான் கத்துவார்கள் என்பது இதுதானோ? அதுசரி... ரஜினியின் தாய்மொழி கன்னடமா.... மராட்டியமா? என கிண்டலாக பதிவிட்டுள்ளார்.
<blockquote class="twitter-tweet" data-lang="en"><p lang="ta" dir="ltr">காலா படத்தை திரையிட அனுமதி கோரி கர்நாடகத்துக்கு கன்னடத்தில் ரஜினி வேண்டுகோள்: செய்தி - ஆபத்து வந்தால் தாய்மொழியில் தான் கத்துவார்கள் என்பது இதுதானோ? அதுசரி... ரஜினியின் தாய்மொழி கன்னடமா.... மராட்டியமா?</p>— Dr S RAMADOSS (@drramadoss) <a href="https://twitter.com/drramadoss/status/1004245083485454336?ref_src=twsrc%5Etfw">June 6, 2018</a></blockquote>
<script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>