அதிமுக பாமக கூட்டணி தொடரும் என அக்கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்  எதிர் வரும் சட்டமன்ற தேர்தலில் பாமக ரஜினி ஆரம்பிக்கும்  கட்சியுடன் கூட்டணி  வைக்கப் போகிறது என  பேசப்பட்டு வந்த நிலையில் ,  ராமதாஸ் இவ்வாறு கூறியுள்ளார் . திருவண்ணாமலையில் நேற்று பாமக முன்னாள் எம்எல்ஏ எதிரொலி மணியன் இல்ல திருமண விழாவில் கலந்துகொண்ட  ராமதாஸ் திருமணத்தை நடத்தி வைத்தார் . அப்போது பேசிய அவர், 

 

தமிழகம் முழுவதும் 234 சட்டமன்ற தொகுதிகளிலும் பாமகவை பலப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகிறோம் ,  அதேபோல் தேர்தல் கூட்டணி குறித்து இப்போதைக்கு எதையுப் கேட்க வேண்டாம் அதற்கு இன்னும் ஓராண்டுகள் உள்ளது .  தேர்தலுக்கு ஆறு மாதத்திற்கு முன்பு தான் கூட்டணி குறித்து பேசுவார்கள் .  தற்போதைக்கு அதிமுக கூட்டணியில் பாமக தொடர்கிறது .  அதிமுகவுடன்தான் கூட்டணி தொடர்வோம்.  தமிழகத்தில் அதிமுக ஆட்சியில் நல்ல திட்டங்களை நிறைவேற்றி வருகின்றனர் என ராமதாஸ் கூறினார் . 

தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த் நடத்திய மாவட்ட செயலாளர்கள் கூட்டம் குறித்து கேட்டதற்கு , மருத்துவர் ராமதாஸ் பதில் அளிக்க மறுத்துவிட்டார் . அவரின் இந்த அறிவிப்பு ஒரு வகையில் அதிமுகவினருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருந்தாலும்  மற்றொரு புறம்,  பாமக தொண்டர்களுக்கு மிகுந்த  குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.   அது குறித்து தெரிவித்த பாமக முன்னணி நிர்வாகிகள் சிலர்,  அதிமுகவில் ஆதரவில் அன்புமணி ராமதாஸ் ராஜ்யசபா  உறுப்பினராகியுள்ள நிலையில் அதிமுக கூட்டணியில் பாமக தொடரும் என ராமதாஸ் தெரிவித்திருப்பது கூட்டணி கட்சிக்கு பாமக கொடுக்கும் மரியாதை என காரணம் தெரிவிக்கின்றனர்.