Asianet News TamilAsianet News Tamil

’அதிமுக கூட்டணியில் பாமக...’ இழுபறிக்கான காரணத்தை போட்டுடைத்த விஜயகாந்த் மைத்துனர்..!

பிரதமர் மோடி வருவதால் நேரமின்மை காரணமாக பேச்சுவார்த்தை நிறைவடையவில்லை என தேமுதிக துணைப் பொதுச்செயலாளர் எ.ல்.கே.சுதீஷ் தெரிவித்துள்ளார். 

PMK coalition of the AIADMK ...DMDK tension
Author
Tamil Nadu, First Published Mar 6, 2019, 4:31 PM IST

பிரதமர் மோடி வருவதால் நேரமின்மை காரணமாக பேச்சுவார்த்தை நிறைவடையவில்லை என தேமுதிக துணைப் பொதுச்செயலாளர் எ.ல்.கே.சுதீஷ் தெரிவித்துள்ளார். PMK coalition of the AIADMK ...DMDK tension

மாதக்கணக்கில் கூட்டணி குறித்து முடிவெடுக்காமல் இழுத்தடித்து வரும் தேமுதிக, அதிமுகவுடன் இணையுமா? என்கிற எதிர்பார்ப்பு எழுந்து வந்தது. இந்நிலையில் இன்று மோடி வருவதால் கூட்டணியை இறுதி செய்ய வேண்டிய கட்டாயத்திற்கு அதிமுக தள்ளப்பட்டது. மோடி இன்னும் சில மணிநேரத்தில் சென்னையில் நடக்க உள்ள பிரச்சார பொதுக்கூட்ட மேடைல் பேச உள்ள நிலையில், சென்னை விமான நிலையம் அருகே உள்ள தனியார் விடுதியான டிரைடண்ட் ஹோட்டலில் அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி மத்திய அமைச்சர் ப்யூஸ்கோயல், பாஜக மாநில தலைவர் சவுந்தரராஜன் ஆகியோடுடன் விஜயகாந்த் மைத்துனர் எல்.கே.சுதீஷுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. PMK coalition of the AIADMK ...DMDK tension

அரை மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற இந்த பேச்சுவார்த்தைக்கு பின்னர் இது குறித்துப் பேசிய எல்.கே.சுதீஷ், ‘ மத்திய அமைச்சர் ப்யூஸ் கோயல் சென்னை வருவதாகவும் அப்போது தன்னை சந்திக்கும்படி போனில் கூறினார். ஆரம்பம் முதலே பாஜக கூட்டணியுடன் பேசி வந்தோம். 2014ல் அனைத்து கூட்டணி கட்சிகளையும் ஒரே நேரத்தில் சந்தித்து பேசியதை போல இம்முறையும் நடக்கும் என எதிர்பார்த்தோம். ஆனால், பாஜக தமிழகத்தை பொறுத்தவரை அதிமுக தலைமையில்தான் கூட்டணி அமைக்கப்படும் என கூறிவிட்டது.

 PMK coalition of the AIADMK ...DMDK tension

அதிமுக- பாமக கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தானபோதுதான் துரைமுருகனுடன் பேசினேன். அவர்கள் எங்களுக்கு அழைப்பு விடுத்தனர். பாமகவுடன் கூட்டணி அமைத்தது வருத்தத்தை ஏற்படுத்தியது. எங்களது கட்சியின் பலத்தின் அடிப்படையிலேயே தொகுதிகள் கேட்டு வருகிறோம்.  தமிழகத்தில் அடுத்த முறை பிரதமர் மோடி பங்கேற்கும் கூட்டத்தில் விஜயகாந்த் பங்கேற்பார். கூட்டணி தொகுதி எண்ணிக்கை குறித்து பேசினோம்; பிரதமர் மோடி வருவதால் மீண்டும் பேச்சுவார்த்தை தொடரும். ஓரிரு நாளில் கூட்டணி முடிவாகும்’’ என அவர் தெரிவித்தார்.   

Follow Us:
Download App:
  • android
  • ios