தமிழகத்தில் அதிமுக, பாஜக, பாமக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் இணைந்து மெகா கூட்டணி அமைத்து மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டது. திமுகவுசக்கு இந்த கூட்டணி கடுமையான டஃப் கொடுத்தது. 

தமிழகத்தைப் பொருத்தவரை கடந்த 18 ஆம் தேதியே தேர்தல் முடிந்து விட்டது. இது வரை 4 கட்ட தேர்தல்கள் மட்டுமே முடிவடைந்துள்ள நிலையில் பிரதமர் மோடி போட்டியிடும் வாராணசி தொகுதியில் கடந்த வாரம் வேட்பு மனு தாக்கல் செய்யும் நிகழ்ச்சி நடந்தது. முதல் நாள் காசியில் மிகப்பிரமாண்டமான ஊர்வலம் நடைபெற்றது..

இந்த நிகழ்வுகளில் பங்கேற்க  தமிழகத்தில் உள்ள கூட்டணிக் கட்சிகளான அதிமுக, பாமக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகளுக்கு பாஜக சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டது. இதையடுத்து ஓபிஎஸ் மற்றும் அவரது ஆகியோர் காசி பேரணி, வேட்பு மனு தாக்கல் ஆகிய நிகழ்ச்சிகளுக்காக சென்றது கடுமையான விமர்சனங்களை கிளப்பியுள்ளது. 

அதே நேரத்தில் அழைப்பு விடுக்கப்பட்டிருந்த பாஜக கூட்டணியில் இருக்கிற பாமக, தேமுதிக, புதிய தமிழகம் ஆகிய கட்சிகள் இதில் பங்கேற்கவில்லை.

இந்தத் தகவலை மாநில பாஜக தேர்தல் பொறுப்பாளர் பியூஷ் கோயல் தமிழக பாஜகவினரிடம் தெரிவித்து, ‘தமிழகத்தில் நம்ம கூட்டணி என்னாச்சு? தேர்தலுக்கு முன்பே முடிந்துவிட்டதா?’ என்று கடுப்பாகி விவரம் கேட்டுள்ளார். இது தமிழக அதிமுக கூட்டணி கட்சிகளிடையே  குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.