‘’இந்த பிரார்த்தனை அன்பு, அமைதி மற்றும் இரக்கத்தின் நித்திய செய்தியை பிரதிபலிக்கிறது. கிறிஸ்துமஸின் உணர்வு நமது சமூகத்திற்கு நல்லிணக்கத்தையும், சகோதரத்துவத்தையும் கொண்டு வரும் என்று நம்புகிறேன்"
பிரதமர் நரேந்திர மோடி இன்று கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி டெல்லியின் கதீட்ரல் தேவாலயத்திற்குச் சென்றார். அவர் ஒரு பிரார்த்தனையிலும் பங்கேற்றார். இந்த தேவாலயம் பழமையான தேவாலயங்களில் ஒன்று. இது டெல்லியில் உள்ள கோல் டக் கானா அருகே அமைந்துள்ளது.

தேவாலயத்தின் புகைப்படங்களை சமூக ஊடகங்களில் வெளியிட்ட பிரதமர் மோடி, "டெல்லியில் உள்ள கதீட்ரல் சர்ச் ஆஃப் தி ரிடெம்ப்ஷனில் கிறிஸ்துமஸ் காலை பிரார்த்தனையில் கலந்து கொண்டேன். இந்த பிரார்த்தனை அன்பு, அமைதி மற்றும் இரக்கத்தின் நித்திய செய்தியை பிரதிபலிக்கிறது. கிறிஸ்துமஸின் உணர்வு நமது சமூகத்திற்கு நல்லிணக்கத்தையும், சகோதரத்துவத்தையும் கொண்டு வரும் என்று நம்புகிறேன்" என்று கூறியுள்ளார்.
கதீட்ரல் தேவாலயம் அதன் அழகிய கட்டிடக்கலைக்கு பெயர் பெற்றது. ஒவ்வொரு ஆண்டும், கிறிஸ்துமஸுக்கு சிறப்பு அலங்காரங்கள் செய்யப்படுகின்றன. டெல்லி முழுவதில் இருந்து மக்கள் இந்த தேவாலயத்திற்கு வந்து கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவிடம் பிரார்த்தனை செய்து கிறிஸ்துமஸைக் கொண்டாடுகிறார்கள். பிரதமர் மோடி இதற்கு முன்பும் இங்கு வருகை தந்துள்ளார்.

