குடும்பமே கட்சி.! கட்சியே குடும்பம்.. வெளுத்து  வாங்கிய பிரதமர் மோடி..! 

மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள கட்சிரோலி ஹிங்ரோலி உள்ளிட்ட தொகுதிகளை சேர்ந்த பாஜக சாவடி பொறுப்பாளர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி காணொலி காட்சி மூலம் உரையாற்றினார்.

அப்போது பலருக்கும் குடும்பம் தான் கட்சி ஆனால் பாஜகவைப் பொறுத்தவரை கட்சிதான் குடும்பம் என பெருமிதமாக தெரிவித்தார். இதில் நாம் முக்கியமாக கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், பிரியங்கா காந்திக்கு காங்கிரஸ் கட்சியில் உயர் பதவி வழங்கிய இந்த தருணத்தில் பிரதமர் இவ்வாறு பேசியிருப்பது ஒரு விஷயத்தை மேற்கொள் காட்டுவதாக அமைந்துள்ளது.

மேலும் ஒரு தனிநபர் அல்லது குடும்பத்தினரின் விருப்பப்படி எந்த ஒரு முடிவும் எடுக்கப்படுவதில்லை ஜனநாயக கொள்கையின்படி தான் வழிநடத்தப்படுகிறது. எனவே தான் பாஜக மக்களுடன் நெருக்கமாக இருப்பதாக உணர்ந்தனர் என பிரதமர் நரேந்திர மோடி பேசினார்