எடப்பாடி Vs ஓபிஎஸ்! இருவரையும் சந்திக்காத பிரதமர் மோடி - வெளியான அதிர்ச்சி காரணம் !
தமிழகத்துக்கு இன்று வருகை தரும் பிரதமர் மோடியை அதிமுகவை சேர்ந்த எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகிய இருவரும் சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியது.
திண்டுக்கல் மாவட்டம் காந்தி கிராமத்தில் உள்ள காந்தி கிராமிய பல்கலைக்கழகத்தின் 36ஆவது பட்டமளிப்பு விழா மற்றும் காந்தி கிராம நிறுவன பவள விழா இன்று மாலை நடைபெற்றது.
பிரதமர் மோடி வருகை:
இந்த விழாவில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி கர்நாடக மாநிலம் பெங்களுருவில் இருந்து தனி விமானம் மூலம் மதுரை விமான நிலையத்துக்கு இன்று பிற்பகலில் வந்தடைந்தார். விமான நிலையத்தில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. விமான நிலையத்திற்கு வெளியே ஏராளமான பாஜகவினர் திரண்டு பிரதமர் மோடியை வரவேற்றனர்.
இதையும் படிங்க.பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கொடுத்த சர்ப்ரைஸ் புத்தகம் என்ன ? அட.! இந்த நாவலா ?
இதையடுத்து, பிரதமர் மோடி திண்டுக்கல் மாவட்டம் காந்தி கிராம கிராமிய பல்கலைக்கழகத்திற்கு ஹெலிகாப்டரில் புறப்பட்டு சென்றார். முன்னதாக மழை காரணமாக அவர் சாலை மார்க்கமாக செல்வதாக இருந்தது. இந்நிலையில், தற்போது மழை இல்லாத காரணத்தினால் பிரதமர் மோடி ஹெலிகாப்டரில் திண்டுக்கல் சென்றார்.
பட்டமளிப்பு விழா:
திண்டுக்கல் வந்தடைந்த பிரதமர் மோடியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், அமைச்சர் ஐ.பெரியசாமி ஆகியோர் வரவேற்றனர். பிறகு விழாவில் பங்கேற்று பேசினார் பிரதமர் மோடி. பிறகு வானிலை காரணமாக சாலை மார்க்கமாக மதுரை சென்றடைந்தார் பிரதமர் மோடி. பிரதமர் மோடியை சந்திக்க அதிமுகவை சேர்ந்த எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் நேரம் கேட்டிருப்பதாக நேற்றே தகவல் வெளியானது.
எடப்பாடி Vs ஓபிஎஸ்:
இந்த இருவரில் ஒருவர் மதுரை விமான நிலையத்தில் பிரதமர் மோடி வரும்போது வரவேற்கவும், மற்றொருவர் பிரதமர் மோடி திரும்பி செல்லும்போது ஒருவர் வழியனுப்புவதாகவும் இருவருக்குமே அனுமதி அளிக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியானது.
இதையும் படிங்க..பிரதமர் மோடியை சந்திப்பது ஓபிஎஸ் டீமா? எடப்பாடி டீமா? எல்லாமே ரத்து.? வெளியான பரபரப்பு தகவல்
ஏற்கனவே செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கு பிரதமர் மோடி வந்த போது, ஓபிஎஸ், இபிஎஸ் இருவரும் சந்திக்க நேரம் கேட்கப்பட்டு, விமான நிலையத்தில் பிரதமர் இறங்கும்போது எடப்பாடி பழனிசாமிக்கும், திரும்பிச் செல்லும்போது ஓ.பன்னீர்செல்வத்திற்கும் நேரம் வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் இன்று நடந்ததோ வேறு என்று அதிமுக வட்டாரங்களில் பேசப்படுகிறது.
சந்திப்பு ரத்து:
மதுரை விமான நிலையத்தில் பிரதமர் மோடியை வழியனுப்ப அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஒ.பன்னீர் செல்வம் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விஸ்வநாதன், வைத்தியலிங்கம் மனோஜ் பாண்டியன் முன்னாள் எம்பி கோபாலகிருஷ்ணன் ஆகியோர் வழியனுப்ப மதுரை விமான நிலையத்திற்கு வந்தனர்.
ஆனால் மதுரை விமான நிலையத்தில் எடப்பாடி பழனிச்சாமி தரப்பிடமோ அல்லது ஓபிஎஸ் தரப்பிடமோ எந்த பேச்சுவார்த்தையும் பிரதமர் மோடி நடத்தவில்லை என்று தகவல் வெளியாகி இருக்கிறது. இது எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் அப்செட்டை உண்டாக்கி உள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதையும் படிங்க..கனமழை காரணமாக பள்ளி - கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை.. எந்தெந்த மாவட்டங்கள் தெரியுமா ? முழு விபரம் இதோ