Asianet News TamilAsianet News Tamil

5 மாநில முதலமைச்சர்களுடன் கொரோனா வைரஸ் தாக்குதல் குறித்து பிரதமர் மோடி இன்று 11 மணிக்கு ஆலோசனை.!!

கொரோனா வைரஸ் தொற்று குறித்து பல்வெறு மாநில அரசுகளின் முதலமைச்சர்களுடன் இன்று காலை 11 மணிக்கு வீடியோ கான்பிரன்ஸ் மூலம்ஆலோசனை நடத்த இருக்கிறார் பிரதமர் மோடி.

PM Modi to discuss coronavirus attack
Author
India, First Published Apr 2, 2020, 7:59 AM IST

T.Balamurukan
கொரோனா வைரஸ் தொற்று குறித்து பல்வெறு மாநில அரசுகளின் முதலமைச்சர்களுடன் இன்று காலை 11 மணிக்கு வீடியோ கான்பிரன்ஸ் மூலம்ஆலோசனை நடத்த இருக்கிறார் பிரதமர் மோடி.

PM Modi to discuss coronavirus attack

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவிவிடாதபடி நாடெங்கும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.இந்தியாவில் கொரோனா கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரிக்கத் தொடங்கியிருக்கிறது.அதேபோல் தமிழகத்திலும் இத தாக்கம் ஏறுவரிசையில் தான் இருக்கிறது. எனவே, இதுகுறித்து அந்தந்த மாநிலங்களுடன் ஆலோசனை நடத்த ஏற்பாடுகளை செய்யும்படி பிரதமர் நரேந்திர மோடி உத்தரவிட்டார். அதன்படி தமிழ்நாடு, பீகார், ராஜஸ்தான், அசாம், அரியானா, மராட்டியம் மற்றும் கேரளா ஆகிய மாநிலங்களுடன் ஆலோசனை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

PM Modi to discuss coronavirus attack

 இந்த மாநில முதலமைச்சர்களுடன் இன்று காலை 11 மணிக்கு பிரதமர் நரேந்திர மோடி வீடியோகான்பிரன்ஸ் மூலம் ஆலோசனை நடத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகம் சார்பில் சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்தபடி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வீடியோகான்பிரன்ஸ்  மூலமாக இணைவார்.இந்த ஆலோசனை கூட்டத்தின்போது சுகாதாரத்துறை அமைச்சர், தலைமைச் செயலாளர், உள்துறை செயலாளர்,சுகாதாரத்துறை செயலாளர் இடம் பெற வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios