சீனா 1959-ம் ஆண்டில் வரையறுத்த எல்லைக் கோட்டை இந்தியா ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது என்று கூறி அந்த நாட்டுக்கு கடிதம் எழுதினார். அப்போது சீனா வகுத்த எல்லைக் கோடு ஒட்டுமொத்த கல்வான் பள்ளத்தாக்கும் சீன பகுதியில் இருப்பதாக காட்டப்பட்டதால் நேரு அதை ஏற்க முடியாது என்று கூறிவிட்டார் இந்தியாவின் முதல் பிரதமராக இருந்த ஜவகர்லால் நேரு.

காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான கபில் சிபல் காணொலி காட்சி மூலம் செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது பேசியவர்... 

லடாக்கின் பங்கோங் சோ பகுதியில் உள்ள "பிங்கர் 4 ரிட்ஜ்" என்ற இடத்தில் கடந்த மே மாதம் முதல் ஜூன் மாதம் வரை சீன ராணுவம் ஊடுருவி இருப்பதும் அங்கு ரடார்களை நிறுவி, ஹெலிகாப்டர் போன்ற கட்டுமானங்களை உருவாக்கி இருப்பதும் செயற்கை கோள் படங்கள் மூலம் தெரியவந்து இருக்கிறது. படங்கள் பொய் சொல்லாது.

கல்வான் பள்ளத்தாக்கில் உள்ள "ரோந்து பாயிண்ட் 14" மற்றும் ஹாட் ஸ்பிரிங்ஸ், எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியில் இருந்து இந்திய பகுதியில் 18 கி.மீ. தொலைவில் உள்ள ஒய் சந்திப்பு, தெப்சாங் சமவெளி பகுதிகளையும் சீனா ஆக்கிமித்து உள்ளதா? இல்லையா? என்பதற்கு மோடி பதில் அளிக்கவேண்டும். அவர் உண்மையை சொல்ல வேண்டும்.

எனவே பிரதமர் மோடி இந்த விஷயத்தில் பொய்யான தகவல்களை தெரிவித்து அரசியல் செய்வதை விட்டுவிட்டு, ஆக்கிரமிப்பு பகுதியில் இருந்த வெளியேறுமாறு சீனாவிடம் கண்டிப்புடன் கூற வேண்டும். சீனாவை அங்கிருந்து வெளியேற்றி இந்திய நிலப்பகுதியை பாதுகாக்க வேண்டும். இதுதான் அரச தர்மம் ஆகும். இதை மோடி செய்ய வேண்டும்.

முந்தைய பிரதமர்களாக இருந்த இந்திராகாந்தியும், லால் பகதூர் சாஸ்திரியும் ராணுவ வீரர்களுக்கு ஊக்கம் அளிக்கும் வகையில், எல்லையில் என்.இ.எப்.ஏ. பகுதியில் உள்ள ராணுவ முன்னணி நிலைகளுக்கு சென்றனர். ஆனால் பிரதமர் மோடி லே பகுதியில் 230 கி.மீ. தொலைவில் உள்ள நிமு பகுதிக்கு சென்று வந்துள்ளார்.

இது 1962-ம் ஆண்டில் இருந்த இந்தியா அல்ல என்றும், ஆக்கிரமிப்பு சகாப்தம் முடிந்து விட்டது என்றும் கூறி இருக்கிறார். இந்தியாவின் முதல் பிரதமராக இருந்த ஜவகர்லால் நேரு, சீனா 1959-ம் ஆண்டில் வரையறுத்த எல்லைக் கோட்டை இந்தியா ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது என்று கூறி அந்த நாட்டுக்கு கடிதம் எழுதினார். அப்போது சீனா வகுத்த எல்லைக் கோடு ஒட்டுமொத்த கல்வான் பள்ளத்தாக்கும் சீன பகுதியில் இருப்பதாக காட்டப்பட்டதால் நேரு அதை ஏற்க முடியாது என்று கூறிவிட்டார்.ஆனால் கடந்த மாதம் 16-ந் தேதி இரு தரப்பு ராணுவத்துக்கும் ஏற்பட்ட மோதலை தொடர்ந்து, ஒட்டுமொத்த கல்வான் பள்ளத்தாக்கும் தங்களுக்கே சொந்தம் என்று சீனா உரிமை கொண்டாடுகிறது.