லடாக் கல்வான் பள்ளத்தாக்கில் பாதிக்கப்பட்ட வீரர்களிடம் பேசிய பிரதமர் மோடி எங்கேயும் சீனா என்ற வார்த்தையை உதிர்க்கவே இல்லை.அதன் தயக்கம் ஏன் என கேள்வி எழுப்பியுள்ளார்.

ஜூன் 15 இந்திய மக்களுக்கு கருப்பு நாள். லடாக் பகுதியில் கல்வான் பள்ளத்தாக்கில் பாதுகாப்பு பணியில் இருந்த இந்திய வீரர்கள் சீன துருப்புகளால் கல் மற்றும் இரும்பு முள்வேலிகளால் கடுமையாக தடுக்கப்பட்டதில் 20 இந்திய வீரர்கள் கொல்லப்பட்ட சம்பவம் தான் அது. இந்த தாக்குதலில் காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். அவர்களை சந்தித்து ஆறுதல் சொல்லுவதற்காக இந்திய பிரதமர் மோடி நேரில் சென்று அவர்களிடம் உற்சாகமாக பேசினார். பிரதமர் நேரில் வந்து ராணுவ வீரர்களிடம் பேசியது கூடுதல் எனர்ஜி பூஸ்டராக அமைந்திருந்தது. 


 தொடர்ந்து, இந்திய வீரர்கள் மரணமடைந்தது குறித்தும், சீன ஆக்ரமிப்பு குறித்தும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் பல்வேறு கேள்விகளை எழுப்பி வருகின்றன. இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், மத்திய முன்னாள் நிதியமைச்சருமான ப.சிதம்பரம் தனது ட்விட்டர் பதிவில்..."முதலமைச்சர்கள் கூட்டத்தில் உரை, தொலைக்காட்சியில் உரை, லடாக்கில் ஜவான்கள் மத்தியில் உரை என்று எந்த உரையிலும் 'சீனா' என்று பிரதமர் மோடி குறிப்பிடுவதில்லையே, இதன் மர்மத்தை யாராவது விளக்குவார்களா?இந்திய நிலப்பகுதியில் ஆக்கிரமித்தது சீனத் துருப்புகளா அல்லது சந்திரமண்டலத்திலிருந்து வந்த அந்நியர்களா? பிரதமர் மோடி அஞ்சுகிறார் என்று சொல்லமாட்டேன், ஆனால் தயங்குகிறார் என்று சொல்வேன். ஏன் இந்தத் தயக்கம்? என்று பதிவிட்டுள்ளார்.