கொரோனா வைரஸ் பரவலைத்தடுக்க ஆலோசனைகள் வழங்குமாறு பாமக இளைஞரணி தலைவரும் எம்.பி.யுமான அன்புமணி ராமதாஸை பிரதமர் மோடி தொலைபேசி மூலம் அழைத்து கேட்டிருக்கிறார்.
கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது மத்திய அரசு. அதன் ஒரு பகுதியாக 21 நாட்கள் லாக்டவுன் அமலில் உள்ளது. இந்நிலையில் கொரோனா வைரஸ் தொற்று வேகமாக இருப்பதால், பிரதமர் மோடி பல தரப்பினருடன் தொடர்ந்து ஆலோசனைகளில் ஈடுபட்டுவருகிறார். அதன் ஒரு பகுதியாக அரசியல் கட்சித் தலைவர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனையில் ஈடுபட்டார். தமிழகத்தில் பாமக இளைஞரணி தலைவரும் எம்.பி.யுமான அன்புமணி ராமதாஸை தொலைபேசியில் பிரதமர் மோடி அழைத்தார்.

 
அப்போது அரசின் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு தரும்படி அன்புமணியைக் கேட்டுக் கொண்டார். கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க அரசு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பான யோசனைகளை வழங்கும்படியும் அன்புமணியை பிரதமர் மோடி கேட்டுக் கொண்டார். அதை ஏற்றுக் கொண்ட  அன்புமணி ராமதாஸ், பாமகவின் யோசனைகளை எழுத்து வடிவில் பிரதமருக்கு அனுப்புவதாக பிரதமரிடம் தெரிவித்தார். மேலும் கொரோனா பரவலைத் தடுக்க பிரதமர் மோடி மேற்கொண்டுவரும் நடவடிக்கைகளை அன்புமணி ராமதாஸ் வாயார புகழ்ந்தார்.