Asianet News TamilAsianet News Tamil

சப்பாத்திக்கு பதில் தக்காளி சாதமா..? கடுப்பில் ஓபிஎஸ்.. முதல்வருக்கு வைத்த கோரிக்கை.

மாநகராட்சி சார்பில் சப்பாத்தி வழங்கப்படுகிறது என்றாலும், உண்மை நிலைமை வேறாக உள்ளது. சென்னையிலேயே இந்த நிலைமை என்றால் பிற மாவட்டங்களில் நிலைமை இன்னும் மோசமாகத்தான் இருக்கும், இந்த திட்டம் ஏழைகளுக்கான திட்டம் என்பதால் நிதி நெருக்கடியை காரணம் காண்பித்து படிப்படியாக இந்த திட்டத்தை நீர்த்துப்போகச் செய்வது என்பது ஏற்றுக் கொள்ளக் கூடியதல்ல,

Please put chapati at night .. OPS Demand.
Author
Chennai, First Published Oct 23, 2021, 12:11 PM IST
  • Facebook
  • Twitter
  • Whatsapp

நிதி நெருக்கடியை காரணம் கூறாமல் அம்மா உணவகங்கள் தொடர்ந்து செயல்பட, இரவு நேரத்தில் சப்பாத்தி விநோகத்தை மீண்டும் துவங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசுக்கு வலியுறுத்தி அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் அறிக்கை வெளியிட்டுள்ளார் அதன் விவரம் பின்வருமாறு.

வயிற்றுக்கு சோறிட வேண்டும் இங்கு வாழும் மனிதர்கள் எல்லாம் என்ற மகாகவி பாரதியாரின் கூற்றுப்படி நோயற்ற சமுதாயத்தை உருவாக்கும்  வகையில் ஏழை எளிய மக்கள் அன்றாட கூலி வேலை செய்பவர்கள், ஓட்டுநர்கள், பாரம் தூக்குபவர்கள் என குறைந்த ஊதியத்தில் பணிபுரிபவர்களுக்கு மலிவு விலையில் சுகாதார மற்றும் தரமான உணவு வழங்கும் திட்டமான அம்மா உணவகம் திட்டம் மாண்புமிகு அம்மா அவர்களால் 2013ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 19ஆம் தேதி அன்று துவக்கி வைக்கப்பட்டது. பின்னர் இந்த திட்டம் தமிழ்நாட்டில் இதர பகுதிகளுக்கும் விரிவுபடுத்தப்பட்டது. 2021 ஆம் ஆண்டு பொதுத்தேர்தல் நடைபெற்று திமுக ஆட்சி பொறுப்பு ஏற்றதில் இருந்து, மாண்புமிகு அம்மா அவர்களின் பெயரிலான பல்கலைக்கழகத்தை நீக்கியது, ஓமந்தூரார் பல்நோக்கு மருத்துவ கல்லூரி மருத்துவமனையை அங்கிருந்து மாற்ற முயற்சிப்பது, காமராஜர் சாலை மாநில உயர்கல்வி மன்ற வளாகத்தில் அமைந்துள்ள அம்மா அவர்களின் முழு திருவுருவச் சிலையை பராமரிக்காதது என்ற வரிசையில் அம்மா உணவகங்களை நீர்த்துப்போகச் செய்யும் நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாக தகவல்கள் வருகின்றன. 

இதையும் படியுங்கள்: காயத்ரி ரகுராம் சறுக்கி விழுந்தபோது விலகிய புடவை.. ஆபாசமாக பதிவிட்ட திமுக பிரமுகர்.. காவல் ஆணையரிடம் புகார்.

Please put chapati at night .. OPS Demand.

இதையும் படியுங்கள்:  பாமக மாவட்ட செயலாளர் நடு ரோட்டில் ஓட ஓட வெட்டி கொலை.. திருநள்ளாறில் 144 நடை உத்தரவு.

அம்மா உணவகங்கள் என்பது ஏழை எளிய மக்களுக்கான உணவகங்கள், இந்த உணவகங்களில் காலையில் இட்லி ஒன்று 1 ரூபாய்க்கும், மதியம் கலவை சாதம் 5 ரூபாய்க்கும், தயிர் சாதம் 3 ரூபாய்க்கும், இரவில் சப்பாத்தி 3 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வந்தது. கொரோனா தொற்றின் போது ஏழை எளிய மக்களுக்கு அட்சய பாத்திரமாக இந்த உணவகங்கள் விளங்கின. ஆனால் இந்த உணவகங்களின் செயல்பாடுகள் தற்போது கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து வருகின்றன, கடந்த சில நாட்களாக இரவு நேரங்களில் ஏழை எளிய மக்களுக்கு வழங்கப்பட்டு வந்த சப்பாத்தி நிறுத்தப்பட்டுள்ளதாகவும் அதற்கு பதில் இட்லி தக்காளி சாதம் போன்றவை வழங்கப்பட்டு வருவதாகவும், குறைவான விலையில் உணவு வழங்கப்படுவதால் சென்னை மாநகராட்சிக்கு 300 கோடி ரூபாய் அளவுக்கு இழப்பு ஏற்படுவதாகவும், அம்மா உணவகங்களுக்கு, கோதுமை வழங்கப்படாததற்கு காரணம் நிதி நெருக்கடி தான் என்றும் தகவல்கள் வருகின்றன. மாநகராட்சி சார்பில் சப்பாத்தி வழங்கப்படுகிறது என்றாலும், உண்மை நிலைமை வேறாக உள்ளது. சென்னையிலேயே இந்த நிலைமை என்றால் பிற மாவட்டங்களில் நிலைமை இன்னும் மோசமாகத்தான் இருக்கும், 

Please put chapati at night .. OPS Demand.

இந்த திட்டம் ஏழைகளுக்கான திட்டம் என்பதால் நிதி நெருக்கடியை காரணம் காண்பித்து படிப்படியாக இந்த திட்டத்தை நீர்த்துப்போகச் செய்வது என்பது ஏற்றுக் கொள்ளக் கூடியதல்ல, இந்த திட்டம் தொடர வேண்டும், விரிவுபடுத்தப்பட வேண்டும் என்பதுதான் ஏழை எளிய மக்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. இந்த திட்டத்தை தொடர்ந்து நடத்த வேண்டிய பொறுப்பும், கடமையும் அரசாங்கத்திற்கு இருக்கிறது. எனவே தமிழக முதலமைச்சர் அவர்கள் இதில் தனி கவனம் செலுத்தி கடந்த சில நாட்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சப்பாத்தி வினியோகத்தை மீண்டும் துவங்கவும், இந்த திட்டம் தொடர்ந்து சிறப்பாக செயல்படவும் நடவடிக்கை எடுத்து, ஏழை எளிய அடித்தட்டு மக்களின் பசிப் பிணியை போக்க வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன். என அதில் கூறப்பட்டுள்ளது. 
 

Follow Us:
Download App:
  • android
  • ios