மாரிதாஸ் விவகாரத்தை திசை திருப்பும் முயற்சியாகவே பியூஷ் மானுஷ் பாஜக அலுவலகத்திற்கு சென்றதாக நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.  

மாரிதாஸ் விவகாரத்தை திசை திருப்பும் முயற்சியாகவே பியூஷ் மானுஷ் பாஜக அலுவலகத்திற்கு சென்றதாக நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். 

இப்போதெல்லாம் சமூக வலைதளங்களில் தான் முட்டல் மோதல் அதிகரித்து வருகிறது. அங்கு உட்கார்ந்து தான் பலரும் பல விஷயங்களை பகிர்ந்து வருகின்றனர். ஆதரவும் எதிர்ப்பும் தெரிவிக்கின்றனர். வலைதளத்தில் ஆரம்பித்து வைக்கும் ஒரு சின்ன தீப்பொறி பற்றி எரிந்து உலகம் முழுவதும் பரவுகிறது. அப்படிப்பட்ட சம்பவத்திற்கு சமீபத்திய உதாரணம் மாரிதாஸ். பாஜக திட்டங்களை ஆதரித்தும், தங்களது கட்சியை காட்டமாக விமர்சித்து அவதூறு பரப்பியதாக திமுக வழக்கு தொடுத்தது.

இந்த நிகழ்வை அடுத்து அவரை ஆதரித்து #ISaupportmarishas என்ற ஹேஷ்டேக்கும் எதிர்ப்பாக #Mentalmaridhas என்கிற ஹேஸ்டாக்கும் சமூக வலைதளங்களில் இந்திய அளவில் ட்ரெண்டானது. கடந்த மூன்று நாட்களாக இந்த விவகாரம் தான் சமூகவலைதளங்களில் பற்றி எரிந்தது. 

இந்நிலையில் பியூஸ் மானுஷ் நேற்று வாலண்டரியாக சேலம் பாஜக அலுவலகத்திற்கு நுழைந்து ஃபேஸ்புக்கில் லைவ் அடித்த படி இந்திய பொருளாதார மந்தநிலை, காஷ்மீர் விவகாரத்தை பற்றி கேள்வி எழுப்பினார். அப்போது கோபப்பட்ட பாஜகவினர் பியூஷ் மானுஷை தாக்கினர். இந்த நிகழ்வை அவர் தவிர்த்து இருக்கலாம். மற்றொரு கட்சி அலுவலகத்திற்கு சென்று இப்படி நடந்து கொண்டது தவறு என விமர்சித்து வருகின்றனர். இந்த விவகாரத்தால் மாரிதாஸ் விவகாரம் மறைக்கப்பட்டு பியூஷ் மானுஷை பற்றியே பேச்சு எழுந்தது. 

Scroll to load tweet…
Scroll to load tweet…
Scroll to load tweet…
Scroll to load tweet…

இது மாரிதாஸ் விவகாரத்தை மறைக்க நடந்த சதி என நெட்டிசன்கள் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். ’’மாரிதாஸ் விவகாரத்தை திசை திருப்பும் முயற்சி, பாஜகவினர் பலரும் இப்பொழுது பியூஸ் மானுஷ் பற்றித்தான் விவாதித்துக் கொண்டிருக்கிறார்கள்’’. என்றெல்லாம் கருத்து தெரிவித்து வருகின்றனர்.