மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை சட்டத்தை கண்டித்து திருச்சியில் வருகிற 22-ம் தேதி பல்லாயிரக்கணக்கான மக்களை ஒன்றுதிரட்டி ‘’ தேசம் காப்போம் ‘’என்ற பேரணி நடைபெற உள்ளது.

இந்நிலையில், தேவாலயங்களையும், மசூதிகளையும் உயர்த்திப்பிடித்து கோயில்களை அசிங்கமான இடமாக சித்தரித்த திருமாவளவனின் தொண்டர்கள் செய்யும் அட்டூழியத்தால் அச்சத்துடன் இருக்கிறார்கள் பொதுமக்கள். தேசம் காப்போம் பேரணிக்காக அவர்கள் விளம்பரம் செய்து வருகிறார்கள். குறிப்பாக நெடுஞ்சாலைகளில் உள்ள சுவர்களில் விசிக நிர்வாகிகள் சுவர் விளம்பரம் செய்து வருகிறார்கள். 

வீடுகள், தனியார் கட்டிடங்கள் இவர்களின் மிரட்டலுக்கு பயந்து கொண்டு சுவர் விளம்பரத்திற்கு அனுமதி கொடுத்து விடுகிறார்கள். ஆனால், இந்துக் கோயில் சுவர்களையும் ஆக்கிரமித்து அதில், சுவர் விளம்பரத்திற்காக பயன்படுத்தி வருகிறார்கள் விசிக தொண்டர்கள்.  '’கோயில் சுவற்றையும் அத்துமீறல் கும்பல் விட்டு வைக்கவில்லை. எதிர்த்து கேட்க அச்சமாக இருக்கிறது. பயந்து வாழ வேண்டிய சூழல். யாரும் ஏன் என்று கேட்கக்கூட பயமாக இருக்கிறது. கேட்டால் பி.சி.ஆர் சட்டத்தில் பொய்யாக வழக்குத் தொடர்வார்கள் என்கிறார்கள் அப்பகுதி மக்கள்.

கோயில்களில் அத்துமீறும் திருமாவளவனின் ஆதரவாளர்கள் இதே மசூதிகள், தேவாலயங்களில் உள்ள சுவர்களில் தங்களது கட்சி சார்ந்த சுவர் விளம்பரங்களை பதிவு செய்ய முடியுமா? என கேள்வி எழுப்புகிறார்கள் நடுநிலைமையாளர்கள்.