Asianet News TamilAsianet News Tamil

ரூ.500 கோடி நஷ்டஈடு கேட்டு வழக்கு..! ஆடுகள் வளர்க்கும் சாதாரண விவசாயி என பதுங்கும் அண்ணாமலை!

திமுக அமைச்சர்களை போல் கொள்ளையடித்து கொடுப்பதற்கு எதுவும் இல்லை. நமது நீதிமன்றங்கள் மீது நம்பிக்கை இருக்கிறது என்று அண்ணாமலை கூறியிருக்கிறார்.

PGR sued rs 500 crore from bjp leader annamalai in defamation case
Author
Chennai, First Published Oct 27, 2021, 7:42 AM IST

திமுக அமைச்சர்களை போல் கொள்ளையடித்து கொடுப்பதற்கு எதுவும் இல்லை. நமது நீதிமன்றங்கள் மீது நம்பிக்கை இருக்கிறது என்று அண்ணாமலை கூறியிருக்கிறார்.

சட்டமன்ற தேர்தலுக்கு முன்னரே செந்தில் பாலாஜியுடன் வம்பு செய்ய தொடங்கிய அண்ணாமலை, திமுக ஆட்சி அமைந்து அவர் அமைச்சரான பின்னரும் விடவில்லை. தமிழ்நாடு மின்சார வாரியத்தில் முறைகேடுகள் நடப்பதாக தொடர்ந்து கூறிவந்த அண்ணாமலை சில நாட்களுக்கு முன்னர் பரபரப்பு செய்தி ஒன்றை வெளியிட்டார். அதில், நலிவடைந்த நிலையிலுள்ள ஒரு மின்நிலையத்தை, ஆளுங்கட்சிப் பிரமுகர் ஒருவர் வாங்கி, அதன் வாயிலாக, ரூ.5,000 கோடிக்கு மின்சாரம் விற்க, தமிழ்நாடு மின்சார வாரியத்துடன் ஒப்பந்தம் செய்திருக்கிறார். ஆளுங்கட்சியைச் சேர்ந்த சில அமைச்சர்களும் லாபத்தை ஈட்டுவதற்காகத்தான் இந்த ஒப்பந்தம் நடக்கிறது. எந்த நிறுவனம் என்பதை கூற விரும்பவில்லை. தேவைப்பட்டால் ஆவணங்களை வெளியிடுவோம் என்றும் அண்ணாமலை தெரிவித்திருந்தார்.

PGR sued rs 500 crore from bjp leader annamalai in defamation case

இதற்கு எதிராக பொங்கியெழுந்த அமைச்சர் செந்தில் பாலாஜி, குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரம் இருந்தால் வெளியிட வேண்டும். இல்லையென்றால் அண்ணாமலை மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கூறினார். மன்னிப்பு கேட்க முடியாது என்று கூறிய அண்ணாமலை ஒரு எக்சல் ஷீட் ஆதாரத்தை வெளியிட்டார். அத்தோடு மின்சார துறை ஊழலுக்கு பொறுப்பேற்று செந்தில் பாலாஜி பதவி விலக வேண்டும் என்றும் அவர் கூறியிருந்தார்.

PGR sued rs 500 crore from bjp leader annamalai in defamation case

இந்த வார்த்தை யுத்தங்களின் போது பி.ஜி.ஆர் நிறுவனத்துக்கு எதிராகவும் அண்ணாமலை பேசியிருந்தார். சமயம் பார்த்து காத்திருந்த திமுக, பி.ஜி.ஆர். நிறுவனம் மூலம் காய் நகர்த்தும் என்று கூறப்பட்டது. இந்தநிலையில், அண்ணாமலைக்கு எதிராக 500 கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு பி.ஜி.ஆர் நிறுவனம் அவதூறு வழக்குத் தொடர்ந்துள்ளது. பி.ஜி.ஆர். நிறுவன இயக்குனர் குறித்து அண்ணாமலை டிவிட்டரில் அவதூறாக பதிவிட்டதாகவும் வக்கீல் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

https://twitter.com/annamalai_k/status/1453034910332035072

அவதூறு வழக்கு பற்றி கருத்து தெரிவித்துள்ள அண்ணாமலை, ‘சார், 500 கோடி ரூபாய்க்கு நோட்டீஸ் அனுப்பி இருக்கின்றீர்கள். நான் ஒரு சாதாரண விவசாயி. என்னிடம் இருப்பது சில ஆடுகள் மட்டும்தான். தி.மு.க அமைச்சர்களைப் போல ஊழல் செய்து கொடுப்பதற்கு எதுவுமில்லை. நம்முடைய நீதிமன்றங்களின் மீது நம்பிக்கை இருக்கிறது. சந்திப்போம்’ என்று குறிப்பிட்டுள்ளார். இதையடுத்து பா.ஜ.க. தலைவர் அண்ணாமலையை திமுக-வினர் சமூக வலைதளங்களில் எள்ளி நகையாடி வருகின்றனர்.

Follow Us:
Download App:
  • android
  • ios