சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெரும் தா.பாண்டியனை சந்தித்து டி.டி.வி. தினகரன் நலம் விசாரித்தார். பின்பு செய்தியாளர்களை சந்தித்த அவர் தா.பாண்டியன் உடல் நிலை முன்னேறி வருகிறது. விரைவில் வீடு திரும்ப இறைவனை பிரார்த்தனை செய்கிறேன் என்றார். என் வீடு அருகே நடைபெற்ற குண்டு வெடிப்பு பற்றி காவல்துறை தீவிரமாக விசாரணை நடத்த வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார். 

எனக்கு தனிப்பட்ட விரோதிகள் யாரும் இல்லை. அரசியல் காரணமாக யாராவது விரோதிகள் இந்த சம்பவத்தை தூண்டி விட்டிருக்கலாம் என்றார். கட்சியில் உள்ளவர்கள் கூறியதால் தான் பரிமளம் கட்சியில் சேர்க்கப்பட்டார். ஆனால் அவர் கடுமையாக நடந்து கொண்டதாக வந்த புகார் அடிப்படையில் தான் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்.

உருவ பொம்மையை எரித்ததாகவும் அதனால் கார் சேதமடைந்ததாகவும் கூறப்படுவது முற்றிலும் தவறு. புல்லட் பரிமளம் கார் ஓட்டுநர் எதையோ கொளுத்துவதும், அதையடுத்தே கார் வெடிப்பதும் அதில் தெளிவாக உள்ளது. எதாவது அரசியல் உள்நோக்கத்தோடு நடந்திருக்கலாம் எனவும் இதுபற்றி போலீஸ் விசாரிக்க வேண்டும் என தினகரன் தெரிவித்தார்.

வெடி விபத்து நிகழ்ச்சிக்கு பின் நிர்வாகிகள் எனக்கு பாதுகாப்பு கேட்கலாம் என்று கூறினார்கள். நான் தனி பாதுகாப்பு வைத்து கொள்ளலாம் என்றே கூறினேன். இதுபோன்ற நாடகத்தை அரங்கேற்றி பாதுகாப்பு கேட்பது அவசியமில்லை. அத்தகைய அரசியல் கட்சித் தலைவர் நான் இல்லை என்று பேட்டியளித்துள்ளார்.