கொரோனா காலத்தில் உலகமே முடங்கிக் கிடக்கும் நிலையில் பெட்ரோல் - டீசல் விலை உயர்வு என்பது மக்களுக்கு அரசு செய்யும் துரோகம் என்று கமல் குற்றம்சாட்டியுள்ளார். 

தமிழக அரசு நேற்று பெட்ரோல்,டீசலுக்கான மதிப்புக் கூட்டு வரியை திடீரென உயர்த்தியது. இதனால் விலைவாசி மேலும் உயர வாய்ப்புள்ளது. கரோனா ஊரடங்கில் பாதிக்கப்பட்டுள்ள பொதுமக்கள் தலையில் மேலும் சுமையை ஏற்றும் செயல் எனப் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டித்துள்ளனர்.

 

இது குறித்து நடிகர் கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில், ’’உலகமெங்கும் பெட்ரோல், டீசல் விலை குறைந்திருக்கும் வேளையில், அவை மீது மதிப்புக் கூட்டு வரி உயர்வு என்பது அத்தியாவசிய பொருட்களின் விலையை உயர்த்தும் என்பதை அறிந்திருந்தும், 40 நாட்களாக மக்கள் வேலையின்றி, வருமானமின்றி தவிக்கும் நிலையில், இதைச் செய்வது மக்களுக்கு அரசு செய்யும் துரோகம்" என அவர் தெரிவித்துள்ளார்.