peter alphonse statement against panneerselvam

அ.தி.மு.க.வை இப்போது ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கும் கேள்வி என்னவென்றால்...’ஓ.பி.எஸ். உட்பட பனிரெண்டு எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்யகோரும் வழக்கின் தீர்ப்பு என்னவாகும்?’ என்பதுதான். 

இதற்கு பதில் சொல்லியிருக்கும் நீண்ட நாள் அரசியல்வாதியும், சட்டமன்ற நடைமுறைகளை வலுவாக அறிந்தவருமான பீட்டர் அல்போன்ஸ்...

“நம்பிக்கை வாக்கெடுப்பு நடந்ததும், அதில் ஓ.பி.எஸ். உள்ளிட்ட பனிரெண்டு பேர் கொறடா உத்தரவை மீறி அரசுக்கு எதிராக வாக்களித்ததும் உண்மை. 

இப்படியொரு பிரச்னையை கிளப்பி, பின் இணைந்து கொள்கிறார்கள் எனும் சூழ்நிலை வந்தால் அதற்கென்று சில நடைமுறைகள் இருக்கின்றன. பொதுவாக நம்பிக்கை வாக்கெடுப்புக்கு பின் பத்து நாட்களுக்குள் ’எங்களுக்குள் பேசி தீர்த்துக் கொண்டோம். அந்த 12 பேர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காதீர்கள்.’ என சபாநாயகரிடம் அரசு கொறடா கடிதம் கொடுத்திருக்க வேண்டும். 

அவ்வாறு கொடுக்காததால் நிச்சயமாக நூறு சதவீதம் பன்னீர்செல்வம் உட்பட பனிரெண்டு பேரின் பதவில் காலியாவது உறுதி. பட்ஜெட் தாக்கலுக்கு முன்பு தீர்ப்பு வந்துவிடும். உயர்நீதிமன்ற தீர்ப்பு வரும் தேதிதான் இந்த அரசின் இறுதி நாள்.” என்று அடித்துச் சொல்லியிருக்கிறார். 

ஆனால் இந்த வாதத்தை அ.தி.மு.க.வின் சீனியர்கள் தரப்பு வன்மையாக மறுத்துள்ளது. 
தீர்ப்பு வரட்டும்!