அதிமுக அணிகள் இணைவதாக கூறுவது இந்த நூற்றாண்டின் அரசியல் நகைச்சுவை என்று காங்கிரசின் மூத்த தலைவர் பீட்டர் அல்போன்ஸ் கூறியுள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த் கடந்த சில நாட்களுக்கு முன்பு ரசிகர்க மன்ற தலைவர்களைச் சந்தித்தபோது, தமிழகத்தில் சிஸ்டம் சரியில்லை என்று கருத்து தெரிவித்திருந்தார். அவரின் இந்த பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது.

காந்திய மக்கள் இயக்க தலைவர் தமிழருவி மணியன், ரஜினி கட்சி துவங்கினால் அவருக்கு 20 முதல் 30 சதவீத வாக்குகள் கிடைக்கும் என்று கூறியிருந்தார்.

வரும் 20 ஆம் தேதி அன்று திருச்சியில் காந்திய மக்கள் இயக்கத்தின் மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் ரசிகர்கள் பெருமளவு கலந்து கொள்ள வேண்டும் என்று ரஜினி கூறியிருந்தார்.

இன்று காலை தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் திருநாவுக்கரசர், ரஜினிகாந்தை அவரது இல்லத்தில் சந்தித்தார்.

இந்த நிலையில், காங்கிரசின் மூத்த தலைவரான பீட்டர் அல்போன்ஸ், ரஜினிகாந்த் எந்த கொள்கைகளுக்காக அரசியலுக்கு வருகிறார்? என்றும் அவர் எந்த கொள்கையில் நிற்கின்றார் என்பதை தெளிவுபடுத்த வேண்டும் என்றும் அவர் சரமாரியாக கேள்விகளை எழுப்பியுள்ளார்.

மேலும், அதிமுக அணிகள் இணைவதாக கூறுவது இந்த நூற்றாண்டின் அரசியல் நகைச்சுவை என்று கூறியுள்ளார். பழனிசாமி அரசு ஊழல் என டுவிட்டரில் மைத்ரேயன் விமர்சித்ததற்கு ஓபிஎஸ் ஆமோதித்தவர் என்றும் பீட்டர் அல்போன்ஸ் கூறியுள்ளார்.