Asianet News TamilAsianet News Tamil

பெரியார் சிலை அவமதிப்பு... திட்டமிட்ட சதி? கனிமொழியிடம் விசாரிக்க வேண்டும்.. திருப்பி அடித்த எல்.முருகன்..!

 திருச்சியில் ஈவெரா அவர்களின் சிலை மீது செருப்பு மாலையிட்டு அவமதித்திருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது. இந்த அநாகரீக செயலை யார் செய்திருந்தாலும் அவர்களை காவல் துறையினர் விரைவில் கைது செய்து சட்டப்படி தண்டிக்க வேண்டும். காவி புனிதமானது அனைவரையும் அரவணைக்கும் தியாகப் பண்பின் குணமே காவி. 

Periyar statue desecrated...L.murugan condemns Kanimozhi
Author
Tamil Nadu, First Published Sep 27, 2020, 4:46 PM IST

காவி புனிதமானது அனைவரையும் அரவணைக்கும் தியாகப் பண்பின் குணமே காவி. அதை தவறான சிந்தனையோடு பயன்படுத்துவது பண்பல்ல என தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் கூறியுள்ளார்.

திருச்சி மாவட்டம் இனாம்குளத்தூர் சமத்துவபுரத்தில் வைக்கப்பட்டுள்ள பெரியார் சிலை அவமதிப்பட்டது. சிலை மீது காவி வர்ணம் ஊற்றியும், செருப்பு வீசியும் மர்மநபர்கள் அவமதிப்பு செய்தனர். இதனைத்தொடர்ந்து சிலை அவமதிப்பில் ஈடுபட்டவர்கள் குறித்து தற்போது போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே, கனிமொழி எம்.பி. பாஜக மாநிலத் தலைவர் எல்.முருகன் முன்பு பேசியதை சுட்டிக்காட்டி, இதுதான் பெரியாருக்கு நீங்கள் காட்டும் மரியாதையா என ட்வீட் செய்திருந்தார். இந்நிலையில்  பெரியார் சிலை அவமதிக்கப்பட்டதை வன்மையாக கண்டிப்பதாக தமிழக பாஜக தலைவர் எல் முருகன் தெரிவித்துள்ளர். 

Periyar statue desecrated...L.murugan condemns Kanimozhi

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்;- திருச்சியில் ஈவெரா அவர்களின் சிலை மீது செருப்பு மாலையிட்டு அவமதித்திருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது. இந்த அநாகரீக செயலை யார் செய்திருந்தாலும் அவர்களை காவல் துறையினர் விரைவில் கைது செய்து சட்டப்படி தண்டிக்க வேண்டும். காவி புனிதமானது அனைவரையும் அரவணைக்கும் தியாகப் பண்பின் குணமே காவி. அதை தவறான சிந்தனையோடு பயன்படுத்துவது பண்பல்ல. ஆனால், அதே நேரத்தில் திமுகவின் பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி அவர்கள் ஈவெராவின் பிறந்த நாளன்று நான் கூறியதை மேற்கொள்காட்டி. இது தான் அவருக்கு நீங்கள் காட்டும் மரியாதையா என்று கேட்டிருப்பது அரசியல் உள்நோக்கத்தோடு வீசியிருக்கிற கேள்வி. காவல்துறை விசாரித்துக் கொண்டிருக்கும் நேரத்திலேயே இதற்கு உள்நோக்கம் கற்பித்து அரசியல் ஆதாயம் தேட முயற்சிக்கும் திமுகவின் வன்மமான அரசியல் உள்நோக்கம் கண்டிக்கத்தக்கது.

Periyar statue desecrated...L.murugan condemns Kanimozhi

மேலும், விசாரணை நிலுவையில் இருக்கும் போதே. இப்படி பேசியிருப்பது. இந்த செயல் திட்டமிட்ட சதியாக இருக்குமோ என்ற சந்தேகத்தையும் எழுப்புகிறது. ஆகையால், காவல் துறையினர் கனிமொழி அவர்களை இது குறித்து விசாரித்து உண்மையை அறிய வேண்டும் இந்த அநாகரீக செயலின் பின்னால் யார் இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும் என தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் கூறியுள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios