Asianet News TamilAsianet News Tamil

நாம் அனைவரும் தமிழர்களாக, ஒற்றுமையாக வாழ திமுகவை ஆதரியுங்கள் - எம்.பி.கனிமொழி பேச்சு

நாம் அனைவரும் தமிழர்களாக, ஒற்றுமையாக வாழ்வதற்கு பொதுமக்கள் திமுகவை ஆதரிக்க வேண்டும் என்று தூத்துக்குடியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட எம்.பி.கனிமொழி தெரிவித்துள்ளார்.

people should support dmk for our brotherhood says mp kanimozhi
Author
First Published Aug 24, 2023, 1:57 PM IST

தூத்துக்குடி  மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள குப்பனாபுரம், வடக்கு, தெற்கு வண்டானம் மற்றும் கொப்பம்பட்டி ஆகிய கிராமங்களில் மக்கள் களம் என்ற பெயரில் பொது மக்களின் குறை, நிறைகள் மற்றும் கோரிக்கைகள் குறித்து அறிந்து கொள்ளும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கலந்து கொண்டு பொது மக்களிடம் குறைகள் குறித்தும், கோரிக்கைகள் குறித்தும் கேட்டறிந்தார். மேலும் நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்.

இதனைத் தொடர்ந்து கனிமொழி எம்.பி.பேசுகையில் அடுத்த மாதம் 15ம் தேதி முதல் முதல்வர் அறிவித்த ரூ.1000 மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படும். பள்ளி குழந்தைகள் பயன்பெறும் வகையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் காலை உணவு திட்டத்தினை தொடங்கி வைத்தார் இத்திட்டம் ஆகஸ்ட் 25ல் விரிவாக்கம் செய்யப்படுகிறது. மக்களைத்தேடி மருத்துவம் திட்டம் மூலமாக வீட்டிற்கே மருத்துவம் கிடைக்கும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. 

போலீச நம்புனா வேலைக்கு ஆகாது; திருடனை ஒரே நாளில் பிடித்து போலீசிடம் ஒப்படைத்த வியாபாரிகள்

ஒவ்வொரு நாளும் மக்களுக்காக புதிய திட்டங்களை உருவாக்கி தருவது மட்டுமின்றி, நம்முடைய உரிமைகளுக்காக, நம்முடைய சுயமரியாதைக்காக, தமிழகத்தின் அடையாளம், தமிழகத்தின் மரியாதைக்காக தொடர்ந்து பாடுபட்டு கொண்டு இருக்கும் இயக்கம் திமுக. பல மாநிலங்களில் கிராமங்களில் சாலைவசதி, பள்ளிக்கூட வசதிகள் இல்லை. அங்கு சில தேசிய கட்சிகள் மத அரசியலை செய்து கொண்டு இருப்பார்கள். 

மணிப்பூர் போல, அங்கு பல குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. அங்கு 2 பெண்களின் நிலை எப்படி இருந்தது, அதற்காக வருத்தப்படாத சகோதிரிகளே உலகில் இல்லை. இப்படி பல இடங்களில் மக்களிடையே வெறுப்பு அரசியலை உருவாக்குவது. ஒற்றுமையாக இருந்தால் பாதுகாப்பு, ஒருவரை பிரித்து பார்த்தால் யாருக்கும் பாதுகாப்பு இல்லை. மக்களை ஒற்றுமையாக வைத்திருப்பவர்களுக்கு உங்கள் ஆதரவு இருக்க வேண்டும். 

லாரி மோதி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 2 சிறுவர்கள் பலி; காவல் துறை விசாரணை

அப்போது தான் நமது குழந்தைகள் படிக்க முடியும், வேலைக்கு போக முடியும். சகோதிரிகள் பாதுகாகப்பாக வாழ முடியும். உங்களின் பாதுகாப்பிற்காக, நாம் தமிழர்களாக ஒற்றுமையாக வாழ்வதற்காக, நம்முடைய அடையாளங்கள், சுயமரியாதைக்காக தொடர்ந்து பாடுபட்டு கொண்டு இருக்கும் திமுகவிற்கு, திமுக ஆட்சிக்கு ஆதரவு தர வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

Follow Us:
Download App:
  • android
  • ios