எங்கள் வீட்டின் அருகிலேயே உள்ள அரசு பள்ளியிக்கு வந்து என் மகனை சேர்த்திருக்கிறோம். அரசுப் பள்ளிகளில் தரமான ஆசிரியர்கள் இருக்கிறார்கள். அவர்கள் நன்றாக பாடம் சொல்லித் தருகிறார்கள், தரமான கல்வி கிடைக்கிறது என்பதால் எங்கள் மகனை அரசு பள்ளியில் சேர்ந்திருக்கிறோம்

புதுச்சேரி மாநில பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் தனது மகனை அரசுப்பள்ளியில் சேர்த்துள்ளார் இதை பலரும் பாராட்டி வருகின்றனர். தனியார் பள்ளிகளுக்கு இணையாக அரசு பள்ளிகள் சிறப்பாக செயல்படுவதாகவும், அரசுப் பள்ளியில் தரமான ஆசிரியர்கள் இருப்பதால் தனது வீட்டுக்கு அருகிலேயே உள்ள அரசுப் பள்ளியில் தன் மகனை சேர்த்திருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். இதை பலரும் மனமுவந்து பாராட்டி வருகின்றனர்.

மாத வாடகை, 3 வேலை சாப்பிட பணம் இருக்கிறதோ இல்லையோ ஆனால் தனது பிள்ளைகளை எப்படியாவது கான்வென்டில் படிக்க வைத்துவிட வேண்டும் என்பதில் பல நடுத்தர, ஏழை எளிய பெற்றோர்கள் குறிக்கோளாக இருந்து வருகின்றனர். அரசு பள்ளியில் படித்தால் தனது பிள்ளைகள் நன்றாக படிக்க மாட்டார்கள் என்றும் தனியார் பள்ளியில் படித்தால் தான் அவர்கள் அறிவாளிகளாக வருவார்கள் என்ற மாயை பெற்றோர்கள் மத்தியில் இருந்து வருகிறது. அதற்காக எப்படியாவது கடன் உடன்பட்டாவது தங்களது பிள்ளைகளை கான்வென்ட்டில் சேர்த்து படிக்க வைக்கும் நிலை இருந்து வருகிறது. இதனால் அரசு பள்ளிகள் இருந்தும் புற்றீசல் போல தனியார் பள்ளிகளின் எண்ணிக்கை பெருகி வருகிறது.

அரசுத்துறையில் பணியாற்றுவோர் கூட, ஏன் அரசுப் பள்ளியில் பணியாற்றுபவர்கள் கூட தங்கள் பிள்ளைகளை அரசு பள்ளிகளில் சேர்ப்பதில்லை. ஆனால் இந்நிலையில் தான் புதுச்சேரி மாநில கல்வித்துறை இயக்குனர் ருத்ர கவுடு தனது மகனை அரசுப்பள்ளியில் சேர்த்துள்ளார். இரண்டு ஆண்டுகளுக்குப் பின்பு மீண்டும் மழலையர் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. மாணவர்கள் ஆர்வமுடன் பள்ளிக்கு வருகை தருகின்றனர். ஆசிரியர்கள் அவர்களை ஆர்வமுடன் வரவேற்று வருகின்றனர். மொத்தத்தில் குழந்தைகளுக்கு கதைகள்சொல்லி வகுப்புகளை ஆசிரியர்கள் பொழுது போக்குள்ளதாக மாற்றி வருகின்றனர். ஒரு பள்ளிக்கூட சூழல் என்பதை காட்டாமல் விளையாட்டு கூடங்களாக வகுப்பறைகளை ஆசிரியர்கள் வடிவமைத்து வருகின்றனர். இந்நிலையில்தான் புதுச்சேரி மாநிலம் லாஸ்பேட்டையில் இயங்கிவரும் அரங்கசாமி கொலைக்கார கோலக்கார நாயக்கர் அரசு நடுநிலைப்பள்ளியில் தனது மகன் அஸூகோஷை மழலையர் வகுப்பில் இன்று சேர்த்துள்ளார்.

அம்மாநில பள்ளிக்கல்வித்துறை இயக்குனரின் இந்த செயல் பலரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது. இது குறித்து தகவல் தெரிவித்துள்ள அவர், முதலில் மத்திய அரசின் கேந்திர வித்யாலயா பள்ளியில்தான் என் மகறை சேர்க்கலாம் என முடிவெடுத்தோம், அடிக்கடி பணி மாறுதல் பெறுவதால் வெவ்வேறு பிராந்தியங்களுக்கு செல்லும் போது அது சிரமமில்லாமல் இருக்கும் என்பதால் அந்த முடிவு செய்யப்பட்டது. ஆனால் இந்தாண்டு கேந்திர வித்யாலயாவில் சேர்க்க முடியவில்லை. அதனால் வேறு பள்ளியில் சேர்க்க முடிவு எடுத்தோம், இந்நிலையில்தான் கொரோனா தீவிரம் குறைந்திருப்பதால், மழலையர்பள்ளிகளை திறக்கலாம் என உத்தரவிட்டிருந்தேன். அதன் அடிப்படையில் எனது மகனை அரசுப் பள்ளியில் சேர்க்கலாம் என முடிவு எடுத்தேன். 

எனவே எங்கள் வீட்டின் அருகிலேயே உள்ள அரசு பள்ளியிக்கு வந்து என் மகனை சேர்த்திருக்கிறோம். அரசுப் பள்ளிகளில் தரமான ஆசிரியர்கள் இருக்கிறார்கள். அவர்கள் நன்றாக பாடம் சொல்லித் தருகிறார்கள், தரமான கல்வி கிடைக்கிறது என்பதால் எங்கள் மகனை அரசு பள்ளியில் சேர்ந்திருக்கிறோம். இது எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது என அவர் கூறியுனார். நிச்சயம் புதுச்சேரி மாநில பள்ளி கல்வித்துறை இயக்குனரின் இந்த செயல் பலருக்கும் முன்மாதிரியாக அமையும் என்றும் இதை பலரும் பாராட்டி வருகின்றனர்.