Asianet News TamilAsianet News Tamil

Pongal Gift: காற்றில் பறக்கும் ஆளுங்கட்சி மானம்.. பொங்கல் பரிசுத்தொகுப்பை சாலையில் கொட்டி மக்கள் போராட்டம்.!

பொங்கல் பரிசு தொகுப்பு பொருட்கள் தரமற்றதாக இருப்பதாக கூறி அந்த பொருட்களை சாலையில் கொட்டி போராட்டத்தில் மக்கள் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து போதும் அதிகாரிகள் போராட்டம் செய்த மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானத்தில் ஈடுபட்டனர். 

People protest by pouring Pongal gift package on the road
Author
Mayiladuthurai, First Published Jan 19, 2022, 10:54 AM IST

ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசு வழங்கப்பட்டதில் இருந்தே பொதுமக்கள் ஆளும் திமுக அரசு மீது கடும் அதிருப்தியில் இருந்து வருவதை கண்கூடாக பார்க்க முடிகிறது. 

பொங்கல் பண்டிகையொட்டி தமிழகத்தில் குடும்ப அட்டை தாரர்களுக்கு பச்சரிசி, வெல்லம், சீரகம், மிளகு, முந்திரி, திராட்சை, கரும்பு உள்ளிட்ட 21 வகையான பொருட்கள் கடந்த 4-ம் தேதி முதல் வழங்கப்பட்டு வருகிறது. பொங்கல் பண்டிகை முடிவடைந்தாலும், இம்மாதம் 31ம் தேதி வரை குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இத்திட்டம் தொடங்கியதில் இருந்தே பல்வேறு இடங்களில் சர்ச்சை வெடித்து வருகிறது. அரசு கொடுத்த பொருட்களில் அரிசி மற்றும் ரவைகளில் வண்டுகள் இருப்பதாவும், சில இடங்களில் பொருட்கள் தரமில்லாமல் இருப்பதாகவும், புளியில் பல்லி என தொடர் புகார்கள் வந்த வண்ணம் உள்ளன. 

People protest by pouring Pongal gift package on the road

அதேபோல், திருப்பத்தூரில் ரேஷன் கடையில் பொங்கல் பரிசு தொகுப்பில் வழங்கப்பட்ட 100 கிராம் மிளகுக்கு பதிலாக பருத்தி கொட்டையும், அவரைக் கொட்டையையும், மிளகாய்த்தூள், தனியாதூள் பாக்கெட்டுகளில் மரத்தூளை கலப்படம்  செய்வதால் விரக்தி அடைந்த பொதுமக்கள் பொங்கல் பரிசு தொகுப்புகளை பிரித்து சாலையில் கொட்டி வீசி ஆதங்கத்தை வெளிப்படுத்தி ஆளுங்கட்சிக்கு எதிராக முழக்கங்களை எழுப்பி வருகின்றனர். 

People protest by pouring Pongal gift package on the road

இந்நிலையில், மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் பகுதியில் உள்ள ரேஷன் கடை ஒன்றில் பொங்கல் முடிந்த பின்னர் பொங்கல் பரிசு தொகுப்பு தந்ததாக கண்டனம் தெரிவித்து பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம் ஈடுபட்டனர். மேலும் பலருக்கு பொங்கல் பரிசு தராமலேயே அவர்களுக்கு தந்து விட்டதாக குறுஞ்செய்தி வந்து இருப்பதை பார்த்து அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

 

பொங்கல் பரிசு தொகுப்பு பொருட்கள் தரமற்றதாக இருப்பதாக கூறி அந்த பொருட்களை சாலையில் கொட்டி போராட்டத்தில் மக்கள் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து போதும் அதிகாரிகள் போராட்டம் செய்த மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானத்தில் ஈடுபட்டனர். இதுதொடர்பாக வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Follow Us:
Download App:
  • android
  • ios