Asianet News TamilAsianet News Tamil

தமிழக மக்களே ரொம்ப உஷாரா இருங்க.. அடுத்த 5 நாட்களுக்கு இந்த மாவட்டங்களில் அடித்து ஊற்றப்போகுதாம்..

மீனவர்களுக்கான எச்சரிக்கை: 02.11.2021: குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.

People of Tamil Nadu, be very vigilant .. for the next 5 days we will be pouring in these districts ..
Author
Chennai, First Published Nov 2, 2021, 12:57 PM IST

குமரிக்கடல் பகுதியில் நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு நோக்கி அடுத்த 24 மணி நேரத்தில் தென்கிழக்கு அரபிக் கடல் பகுதிக்கு நகரக் கூடும். மேலும் இந்த காற்றழுத்த தாழ்வு பகுதியில் இருந்து தெற்கு ஆந்திரா வரை நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக

02.11.2021,03.11.2021: (ஆரஞ்சு எச்சரிக்கை) திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கன மழையும், சென்னை, விழுப்புரம், கடலூர், வேலூர், ராணிப்பேட்டை, மதுரை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், திருநெல்வேலி, தூத்துக்குடி, டெல்டா மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு   இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும் பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. 

இதையும் படியுங்கள்: 3 சமையல் எரிவாயு சிலிண்டர் இலவசம்.. ஸ்மாட் போன் இலவசம்.. பெண்களை குறிவைத்த பிரயங்கா காந்தி. அலறும் யோகி.

மேலும் 04.11.2021: செங்கல்பட்டு, திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், காஞ்சிபுரம், சேலம்,  டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு   இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும் பெய்யக்கூடும். 

People of Tamil Nadu, be very vigilant .. for the next 5 days we will be pouring in these districts ..

05.11.2021,06.11.2021: திருவள்ளூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்டங்களில் ஓரிரு   இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், கடலோர மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய உள் மாவட்டங்கள் , புதுவை, காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும், ஏனைய மாவட்டங்களில் அநேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும். சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக   மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் மிதமான மழையும், அவ்வப்போது கன மழையும் பெய்யக்கூடும் பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 30 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்.

கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்): 

மரக்காணம் (விழுப்புரம்) 20, ஆட்சியர் அலுவலகம் கடலூர் (கடலூர் ) 13, நன்னிலம் (திருவாரூர்), கடலூர் தலா 12, வேடசந்தூர் (திண்டுக்கல்), கொள்ளிடம் (மயிலாடுதுறை) தலா 10, குறிஞ்சிப்பாடி (கடலூர்), திருத்துறைப்பூண்டி (திருவாரூர்) தலா 9, ராமநாதபுரம் (ராமநாதபுரம்), பரமக்குடி (ராமநாதபுரம்), நீடாமங்கலம் (திருவாரூர்), அரியலூர், கும்பகோணம் (தஞ்சாவூர்), புதுச்சேரி, அவலாஞ்சி (நீலகிரி), பண்ருட்டி (கடலூர்), நாகப்பட்டினம்), வானமாதேவி (கடலூர்) தலா 7, கமுதி (ராமநாதபுரம்), திருவிடைமருதூர் (தஞ்சாவூர்), சீர்காழி (மயிலாடுதுறை), பொன்னேரி (திருவள்ளூர்), முத்துப்பேட்டை (திருவாரூர்), நெய்வேலி  (கடலூர்), அய்யம்பேட்டை (தஞ்சாவூர்) தலா 6, காமாட்சிபுரம் (திண்டுக்கல்), கோவை தெற்கு (கோவை), எட்டயபுரம் (தூத்துக்குடி ), வலங்கைமான் (திருவாரூர்), பரங்கிப்பேட்டை (கடலூர்), தலைஞாயிறு (நாகப்பட்டினம்), திருமானூர் (அரியலூர்), ஒட்டன்சத்திரம் (திண்டுக்கல்), வந்தவாசி (திருவண்ணாமலை), மகாபலிபுரம் (செங்கல்பட்டு), ராஜபாளையம் (விருதுநகர்) தலா 5,

இதையும் படியுங்கள்: 

People of Tamil Nadu, be very vigilant .. for the next 5 days we will be pouring in these districts ..

மீனவர்களுக்கான எச்சரிக்கை:  திமுகவுக்கு கொடுத்த டைம் ஓவர்.. ஆட்டத்தை ஆரம்பித்த ஓபிஎஸ்-இபிஎஸ்.. 5 மாவட்டத்தில் ஆர்பாட்டம்.

02.11.2021: குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள். 03.11.2021,04.11.2021: கேரள கடலோரப் பகுதிகள், லட்சத்தீவு, மற்றும் தென்கிழக்கு அரபிக் கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். 05.11.2021,06.11.2021: மத்திய கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகள், கர்நாடக கடலோரப் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios