Asianet News TamilAsianet News Tamil

தமிழக மக்களே உஷார்..!! அடுத்த 48 மணி நேரத்தில் இந்த மாவட்டங்களில் அடித்து ஊற்றப்போகிறது என எச்சரிக்கை..!!

கடலூர், நீலகிரி, சேலம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும், என தெரிவிக்கப்பட்டுள்ளது.

People of Tamil Nadu are alert, Warning that it is going to hit these districts in the next 48 hours
Author
Chennai, First Published Sep 29, 2020, 12:34 PM IST

தென்மேற்கு பருவமழை ராஜஸ்தான் மற்றும் பஞ்சாப் மாநில பகுதிகளில் இருந்து விலக தொடங்கியுள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்கு விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, மதுரை, சிவகங்கை, தேனி, திண்டுக்கல், ராமநாதபுரம், விருதுநகர் மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழையும், ஏனைய கடலோர மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

People of Tamil Nadu are alert, Warning that it is going to hit these districts in the next 48 hours 

அடுத்த 48 மணி நேரத்தில் கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, நாகப்பட்டினம், மயிலாடுதுறை, அரியலூர், பெரம்பலூர், திருச்சிராப்பள்ளி, சேலம், நாமக்கல், தர்மபுரி, ஈரோடு, நீலகிரி, தேனி, திண்டுக்கல், வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால், பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழையும், ஏனைய கடலோர மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடலூர், நீலகிரி, சேலம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும், என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

People of Tamil Nadu are alert, Warning that it is going to hit these districts in the next 48 hours

அதேபோல் நகரின் சில பகுதிகளில் இடியுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும். என கூறப்பட்டுள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸையும்  குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸையொட்டியும் பதிவாக கூடும். கடந்த 24 மணி நேரத்தில் பொன்னமராவதி (புதுக்கோட்டை) 1 சென்டி மீட்டர் மழையும், மானாமதுரை (சிவகங்கை) இலுப்பூர்,  புளியபட்டி (மதுரை) மணப்பாறை (திருச்சிராப்பள்ளி) 6 சென்டி மீட்டர் மழையும், கீழ்பெண்ணாத்தூர் (திருவண்ணாமலை) கொடுமுடி (ஈரோடு) அரவக்குறிச்சி (கரூர்) தலா 4 சென்டிமீட்டர்  மழையும் பதிவாகி உள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios