Asianet News TamilAsianet News Tamil

Tamilnadu rain: தமிழக மக்களே உஷார்.. அடுத்த 4 நாட்களுக்கு இந்த மாவட்ட மக்கள் கவனமா இருங்க. வானிலை அலர்ட்.

தென் தமிழ்நாடு மற்றும் இலங்கையை ஒட்டி நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக 06.12.2021: திருநெல்வேலி, தென்காசி, தேனி, மதுரை, விருதுநகர், திருச்சிராப்பள்ளி, கரூர், திருப்பூர், நாமக்கல், திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய தென் மாவட்டங்கள், 

People of Tamil Nadu are alert .. People of this district should be alert for the next 4 days .. Weather Center Warning.
Author
Chennai, First Published Dec 6, 2021, 2:02 PM IST

தென் தமிழ்நாடு மற்றும் இலங்கையை ஒட்டி நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக 06.12.2021: திருநெல்வேலி, தென்காசி, தேனி, மதுரை, விருதுநகர், திருச்சிராப்பள்ளி, கரூர், திருப்பூர், நாமக்கல், திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய தென் மாவட்டங்கள், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும்  உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும், வட கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது மேலும், 

07.12.2021: தென் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும். 08.12.2021:  கடலூர், ராமநாதபுரம், புதுக்கோட்டை, டெல்டா மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டி உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்யக் கூடும்.  

People of Tamil Nadu are alert .. People of this district should be alert for the next 4 days .. Weather Center Warning.

09.12.2021: அரியலூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி , திருவண்ணாமலை, தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், கடலோர மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய உள் மாவட்டங்கள், தென் மாவட்டங்கள், புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும் பெய்யக்கூடும். 10.12.2021: தமிழ்நாடு மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு. வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் அதிகபட்ச வெப்பநிலை 31 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்.

People of Tamil Nadu are alert .. People of this district should be alert for the next 4 days .. Weather Center Warning.

கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்): வேப்பூர் (கடலூர்), போடிநாயக்கனூர் (தேனி) தலா 10, உத்தமபாளையம் (தேனி), காட்டுமயிலூர் (கடலூர்), கன்னிமார் (கன்னியாகுமரி), திருப்பூர் முகாம் அலுவலகம் (திருப்பூர்) தலா 9, பெருஞ்சாணி அணை (கன்னியாகுமரி), ஸ்ரீவில்லிபுத்தூர் (விருதுநகர்), சிற்றாறு (கன்னியாகுமரி), உடுமலைப்பேட்டை (திருப்பூர்), வத்திராயிருப்பு (விருதுநகர்), புத்தன் அணை (கன்னியாகுமரி) தலா 7,லப்பைக்குடிகாடு (பெரம்பலூர்), ஆண்டிப்பட்டி (தேனி), செட்டிகுளம் (பெரம்பலூர்), கூடலூர் (தேனி) தலா 6, மீனவர்களுக்கான எச்சரிக்கை: ஏதுமில்லை இவ்வாறு வானிலை மையம் எச்சரித்துள்ளது. 
 

Follow Us:
Download App:
  • android
  • ios