பாஜக வலுவடைய கூடாது.. சீரும் அகிலேஷ் யாதவ் ! புதிய கூட்டணி ஆரம்பமா?
பீகாரில் பாஜக கூட்டணியிலிருந்து வெளியேறி, எதிர்க்கட்சிகளுடன் கூட்டணியமைத்து மீண்டும் முதல்வர் ஆகியிருக்கிறார் நிதிஷ் குமார்.
பாஜகவுடனான கூட்டணியை விட்டு வெளியேறுவதாக அறிவித்த ஜேடியூ தலைவரான நிதிஷ்குமார், தமது முதல்வர் பதவியையும் ராஜினாமா செய்தார். மேலும் ஆர்ஜேடி - காங்கிரஸ் - இடதுசாரிகளுடன் இணைந்து புதிய கூட்டணி ஆட்சியை அமைத்திருக்கிறார். 8-வது முறையாக பீகார் மாநில முதல் மந்திரியாக நிதிஷ்குமார் இன்று மீண்டும் பதவியேற்றார்.
துணை முதல்வராக தேஜஸ்வி யாதவ் பதவியேற்றார். நிதிஷ் குமாருக்கு ஆளுநர் பகு சவுகான் பதவி பிரமாணம் செய்து வைத்தார். லாலு பிரசாத் யாதவ் கட்சியின் ஆதரவோடு பீகார் மாநில முதல் மந்திரியாக நிதிஷ்குமார் பதவியேற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்க வேண்டிய விஷயமாகும். பல்வேறு மாநிலங்களில் எதிர்க்கட்சிகளின் ஆட்சியை எளிதாக கவிழ்த்த பாஜகவுக்கு இது பேரிடியாக இறங்கியுள்ளது.
மேலும் செய்திகளுக்கு..ஒன்று சேரும் ஓபிஎஸ் - சசிகலா? பதறும் எடப்பாடி பழனிசாமி..அதிமுகவில் மீண்டும் பரபரப்பு !
இந்நிலையில் உத்தரபிரதேசத்தின் கன்னாஜ் மாவட்டத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், 'மத்திய அரசு அரசியல் சாசனம் மற்றும் ஜனநாயக நிறுவனங்களை பலவீனப்படுத்துகிறது. 'உங்கள் வேலைவாய்ப்பு பறிக்கப்படுகிறது. இந்தியாவின் அரசியல் சாசனம் தாக்குதலுக்கு உள்ளாகிறது. பாஜக அதிகமாக வலுவடைந்தால் உங்கள் வாக்குரிமை பறிபோகும்.
இதை நீங்கள் நகைச்சுவையாக எடுத்துக்கொள்ளக்கூடாது. அண்டை நாடான சீனாவில் தேர்தல் ஏதாவது நடக்கிறதா ? அதற்கு அப்பால் போனால் ரஷ்யாவிலும் தேர்தல்கள் இலலை. பாகிஸ்தானில் ராணுவம் விரும்பும் அரசு அமைகிறது. மியான்மர் உள்ளிட்ட அண்டை நாடுகளில் தேர்தல்கள் இல்லை. எனவே எச்சரிக்கை தேவை' என்று பேசினார். பாஜகவுக்கு எதிராக 3 ஆம் அணி உருவாகிறதா ? என்ற கேள்வியும் தற்போது அரசியல் வட்டாரங்களில் எழுந்துள்ளது.
மேலும் செய்திகளுக்கு..நான் SOFT கிடையாது.. சர்வாதிகாரியாக மாறுவேன்.! அரசு அதிகாரிகள் கூட்டத்தில் கொந்தளித்த முதல்வர் ஸ்டாலின்!