Asianet News TamilAsianet News Tamil

கொரோனாவை கட்டுப்படுத்த எடப்பாடி அரசு தத்தளிப்பதால் மக்கள் பீதி... டி.டி.வி.தினகரன் வேதனை..!

முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளோ பேரிடரை முழுமையாக எதிர்கொள்வதற்கான செயல்திட்டமோ இல்லாமல் ஆட்சியாளர்கள் தத்தளிப்பது மக்களை பீதியடையச் செய்துள்ளது என அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் வேதனை தெரிவித்துள்ளார்.
 
People are panicking as the government tries to control the corona ... ttv Dhinakaran
Author
Tamil Nadu, First Published Jun 19, 2020, 10:22 AM IST

முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளோ பேரிடரை முழுமையாக எதிர்கொள்வதற்கான செயல்திட்டமோ இல்லாமல் ஆட்சியாளர்கள் தத்தளிப்பது மக்களை பீதியடையச் செய்துள்ளது என அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் வேதனை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘’கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களுக்கு ஆரம்பத்தில் அரசு சார்பில் 10 நாட்கள் சாப்பிடுவதற்கான மருந்து பெட்டகம் வழங்கப்பட்டது. ஆனால், தற்போது பாதிப்பு உச்சத்திற்குச் சென்று கொண்டிருக்கும் நேரத்தில், அத்தகைய மருந்துகள் அளிக்கப்படுவது நிறுத்தப்பட்டுவிட்டதாக செய்திகள் வருகின்றன.

 People are panicking as the government tries to control the corona ... ttv Dhinakaran

‘பொது இடங்களில் கிருமிநாசினி மருந்து தெளிப்பதால் பலன் ஏதுமில்லை’என்று உலக சுகாதார நிறுவனம் கூறிவிட்ட பிறகும், விழுந்து விழுந்து மருந்து அடிக்கும் இந்த ஆட்சியாளர்கள், தேவையான மாத்திரைகளைப் போதுமான அளவுக்கு வாங்காமல் அலட்சியம் காட்டுவது ஏன் என்று தெரியவில்லை.  People are panicking as the government tries to control the corona ... ttv Dhinakaran

நோயாளிகளுக்குச்சிகிச்சை அளிப்பதற்காக டெல்லியைப் போன்று ரயில்பெட்டிகளைத் தயார் செய்யும் பணியிலும் பழனிசாமி அரசு அக்கறை காட்டவில்லை. இப்படி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளோ பேரிடரை முழுமையாக எதிர்கொள்வதற்கான செயல்திட்டமோ இல்லாமல் ஆட்சியாளர்கள் தத்தளிப்பது மக்களை பீதியடையச் செய்துள்ளது’’எனத் தெரிவித்துள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios