திமுக அரசு கொடுக்கும் வலி இனிமேல்தான் மக்களுக்கு தெரியப்போகிறது என்றும், ஆயிரம் ரூபாய் செலுத்திய இடங்களில் இனி வரியாக 15 ஆயிரம் முதல் 20 ஆயிரம் ரூபாய் செலுத்த வேண்டிய நிலை வந்துள்ளது என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
திமுக அரசு கொடுக்கும் வலி இனிமேல்தான் மக்களுக்கு தெரியப்போகிறது என்றும், ஆயிரம் ரூபாய் செலுத்திய இடங்களில் இனி வரியாக 15 ஆயிரம் முதல் 20 ஆயிரம் ரூபாய் செலுத்த வேண்டிய நிலை வந்துள்ளது என்றும் அவர் எச்சரித்துள்ளார். விரைவில் இந்த ஆட்சியை மக்கள் தூக்கி எறிவார்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.
திமுக ஆட்சிக்கு வந்தது முதல் பல்வேறு அதிரடி அறிவிப்புகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. அதில் பல திட்டங்கள் மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பையும் பாராட்டையும் பெற்று வருகிறது.
இது ஒருபுறம் உள்ள நிலையில் பல்வேறு வரிகளை திமுக உயர்த்திய வண்ணம் உள்ளது. இது மக்கள் மத்தியில் அதிக வரிச் சுமையை ஏற்படுத்தியுள்ளது. இதை எதிர்க்கட்சிகளான பாஜக அதிமுக மிக கடுமையாக கண்டித்து வருகின்றன, தற்போது மின்கட்டண உயர்வு தமிழக அரசு அறிவித்துள்ளது, இதை திரும்பப் பெற வேண்டும் என்று வரும் 25ம் தேதி அதிமுக போராட்டம் அறிவித்துள்ளது.

இதையும் படியுங்கள்: முதல் மகன் எம்.பி.. இரண்டாவது மகனை எம்.எல்.ஏ.வாக்க ஆசைப்படும் எடியூரப்பா.. பரபரப்பை கிளப்பிய மாஜி முதல்வர்.!
இந்நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்துள்ள முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி திமுக அரசையும் கடுமையாக விமர்சித்துள்ளார். கோவையில் இது குறித்து பேசிய அவர் கூறியதாவது:- ஒரு பிரச்சினையை மறைக்க இன்னொரு பிரச்சினையை கிளப்பி விடுவது தான் திமுகவின் வேலை, அதை திமுக சரியாக செய்து வருகிறது தற்போது சொத்துவரி, மின் கட்டண உயர்வு என அடுத்தடுத்து வரிகள் உயர்த்தி அறிவிக்கப்பட்டு வருகிறது. இதை கண்டித்து வரும் 25ஆம் தேதி மாநிலம் முழுவதும் போராட்டம் நடத்தப்பட உள்ளது. கோவையில் அதிமுக சார்பில் 3 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது, இதற்கான பணிகள் தற்போது நடந்து வருகிறது.
இதையும் படியுங்கள்: என்ன கட்சியில் இருந்து நீக்கிட்டாங்க! உச்சநீதிமன்றத்தில் முறையிட்ட OPS! தலைமை நீதிபதி என்ன சொன்னார் தெரியுமா?
சொத்துவரி மற்றும் மின்கட்டண உயர்வு ஆகியவற்றை உயர்த்தி மக்கள் விரோத ஆட்சியை திமுக தந்து கொண்டிருக்கிறது, இனிமேல் தான் திமுக அரசு உயர்த்தியுள்ள வரிகளின் வலி என்ன என்பது மக்களுக்கு தெரிய போகிறது, இனி வரி சீராய்வும் செய்யப் போகிறார்கள், அவ்வாறு செய்தால் ஆயிரம் ரூபாய் செலுத்தியவர்கள் இனி 15 ஆயிரம் முதல் 20 ஆயிரம் ரூபாய் வரை செலுத்த வேண்டிய நிலை வரும், மத்திய அரசின் மீது பழி போட்டு இப்போது மின் கட்டணம் ஏற்றப்பட்டுள்ளது, வீட்டில் இரண்டு தளங்கள் இருந்தால் கீழ் தளத்திற்கு தனி ஒரு இணைப்பும், மேல் தளத்திற்கு தனி இணைப்பும் வழங்கப்பட்டு வந்தது.

ஆனால் இனிவரும் காலங்களில் ஒரே இணைப்புதான் என கூறுகிறார்கள், 100 யூனிட் இலவச மின்சாரம் இனிமேல் இருக்காது, திமுக ரொம்ப டெக்னிக் ஆக மக்களை மோசடி செய்கிறது, மக்கள் மீது மறைமுகமாக சுமையை ஏற்றி இருக்கிறார்கள் ஒரு பிரச்சினையை மறைக்க இன்னொரு பிரச்சினையை கிளப்பி விட்டு மற்றவர்கள் மீது பழி போடுவது தான் திமுகவில் வேலை, அதை இப்போது சரியாக செய்து கொண்டிருக்கிறார்கள், கோவையில் ரோடு போடுகிறோம் எனக் கூறினார்கள், ஆனால் அனைத்தையும் ரத்து செய்து விட்டார்கள். சாலைகள் எல்லாம் குண்டும் குழியுமாக உள்ளது, லஞ்சம் இல்லாமல் எந்த வேலையும் நடப்பதில்லை இவ்வாறு கூறினர்.
