மிகப்பெரிய சமூக அநீதியை சரி செய்த அரசு.. அன்றே எச்சரித்தேன்.! இது பாமகவிற்கு கிடைத்த வெற்றி - ராமதாஸ் நன்றி

அனைத்து பிரிவு அரசுப் பணிகளுக்கும் இட ஒதுக்கீடு வழங்குவது தான் உண்மையான சமூக நீதி என்று கூறியுள்ளார் ராமதாஸ்.

pattali makkal katchi founder s Ramadoss thanks to Puducherry govt

பாமக நிறுவனர் ராமதாஸ் இன்று வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், புதுச்சேரியில் காவல் உதவி ஆய்வாளர், வருவாய் ஆய்வாளர் உள்ளிட்ட அரசிதழ் பதிவு இல்லாத பி பிரிவு பணிகளுக்கும் இட ஒதுக்கீடு நீட்டிக்கப்பட்டிருக்கிறது.

இதன் மூலம் புதுவையில் நிகழ்த்தப்பட்ட மிகப்பெரிய சமூக அநீதி சரி  செய்யப்பட்டிருக்கிறது.  இது வரவேற்கத்தக்க நடவடிக்கையாகும். புதுவையில் மேற்கண்ட பணிகளுக்கு வழங்கப்பட்டு வந்த இட ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டதைக் கண்டித்து பா.ம.க. தான் தொடர் போராட்டங்களை நடத்தியது. நானே களமிறங்கி போராடுவேன் என்று எச்சரித்திருந்தேன்.

இதையும் படிங்க..அடக்குமுறையின் உச்சத்தில் பெரியார் பல்கலை.. 5 மாணவிகளுக்கு ஆதரவாக குரல் கொடுத்த பாமக நிறுவனர் ராமதாஸ்

pattali makkal katchi founder s Ramadoss thanks to Puducherry govt

அதன் பயனாக இட ஒதுக்கீடு மீண்டும் கிடைத்துள்ளது. இது பா.ம.க.வின் வெற்றி. புதுவையில் இன்னும் முழுமையான சமூக நீதி நடைமுறைப்படுத்தப்படவில்லை. அரசிதழ் பதிவு இல்லாத பி பிரிவு மற்றும் சி&டி பிரிவு பணிகளுக்கு மட்டும் தான் இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. ஏ பிரிவு மற்றும் அரசிதழ் பதிவு பெற்ற பி பிரிவு பணிகளுக்கு இதுவரை இட ஒதுக்கீடு வழங்கப்படவில்லை.

இதையும் படிங்க..ஃபர்ஸி வெப் சீரிஸை போல ரோட்டில் பணத்தை வீசிய பிரபல யூடியூபர்.. வெளியான அதிர்ச்சி வீடியோ

அனைத்து பிரிவு அரசுப் பணிகளுக்கும் இட ஒதுக்கீடு வழங்குவது தான் உண்மையான சமூக நீதி ஆகும். இதை உணர்ந்து ஏ பிரிவு மற்றும் அரசிதழ் பதிவு பெற்ற பி பிரிவு பணிகளுக்கும் இட ஒதுக்கீட்டை நீட்டிக்க வேண்டும். அது குறித்து  மாநில பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் பரிந்துரையைப் பெற வேண்டும்’ என்று தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க..பாஜகவில் இணையும் முன்னாள் முதல்வர்.. அடேங்கப்பா இவரா.? இது நம்ம லிஸ்ட்ல இல்லையே.!!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios