Asianet News TamilAsianet News Tamil

லேசான பாதிப்பு உள்ள நோயாளிகள் நேரடியாக அரசு மருத்துவமனைக்கு வருவதை தவிர்க்க வேண்டும்- பிரகாஷ் வேண்டுகோள்.

தீவிர அறிகுறிகள் கொண்ட நோயாளிகளுக்கு மட்டுமே முன்னுரிமை வழங்க வேண்டும் என்ற தலைமை செயலாளரின் அறிவுறுத்தலின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. 

Patients with mild vulnerability should avoid coming directly to the government hospital- Prakash pleads.
Author
Chennai, First Published Apr 23, 2021, 11:42 AM IST

கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு அறிகுறிகள் இல்லாத நோயாளிகள் நேரடியாக அரசு மருத்துவமனைக்கு வருவதை தவிர்க்க வேண்டும் என சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார். சென்னை ஈக்காட்டுதாங்கலில் உள்ள தேசிய திறன் பயிற்சி நிறுவனத்தில் அமைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு மையத்தை சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் பார்வையிட்டார். பின் செய்தியாளர்களை சந்தித்து அவர் பேசியதாவது. தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் வல்லுனர்களின் கருத்துப்படி மே மாதம் இடைப்பட்ட நாட்களில் தொற்று உச்சத்தை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் எதார்த்தங்களை புரிந்து கொண்டு பொதுமக்கள் விழிப்புடன் செயல்பட வேண்டும். 

Patients with mild vulnerability should avoid coming directly to the government hospital- Prakash pleads.

ஒரு நபருக்கு கொரோனா தொற்று ஏற்படும் நிலையில்  தொற்றுக்கான அறிகுறிகள் இல்லாத பட்சத்திலோ அல்லது லேசான அறிகுறிகள் இருக்கும் பட்ச்சத்திலோ  மருத்துவமனையை நேரடியாக நாடுவதை நோயாளிகள் தவிர்க்க வேண்டும். தீவிர அறிகுறிகள் இருக்கும் பட்சத்தில் மட்டுமே அரசு மருத்துவமனைகளில் நோயாளிகள் அனுமதிக்கப்படுவர். தொற்று உறுதி செய்யப்பட்டு அறிகுறிகள் இல்லாத அல்லது லேசான அறிகுறிகள் உள்ள நோயாளிகள் சென்னை முழுவதிலுமுள்ள 12 கொரோனா கண்காணிப்பு மையங்களை தொடர்பு கொள்ளவேண்டும். பின் அங்குள்ள மருத்துவர்களின் ஆலோசனைக்கு இணங்க வீடுகளில் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும். அறிகுறிகள் இல்லாத நோயாளிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் போது மருத்துவர்களுக்கு வேலைப்பளு ஏற்படுவதனால் தீவிர அறிகுறிகள் கொண்ட நோயாளிகளை கவனிப்பதில் சிக்கல் ஏற்படுவதுடன், நோயாளிகளின் இறப்பு அதிகரிக்க வாய்ப்புள்ளது. 

Patients with mild vulnerability should avoid coming directly to the government hospital- Prakash pleads.

தினசரி வரும் 3700 தொற்று பாதிக்கப்பட்டவர்களில் 1200 பேருக்கு மட்டுமே தீவிர அறிகுறிகள் ஏற்படுகிறது. அவர்களுக்கு மட்டுமே முன்னுரிமை கொடுக்கப்படும். இதனை பொதுமக்கள் புரிந்து கொண்டு செயல்படுவதன் மூலம் பெரும்பாலான இறப்புகளை தவிர்க்க முடியும். தொற்று உறுதி செய்யப்படும் பட்சத்தில் பொதுமக்கள் மாநகராட்சி வாகனங்களை நாட வேண்டும் என்ற அவசியமில்லை தங்களது சொந்த வாகனங்களிலேயே பாதுகாப்புடன் கண்காணிப்பு மையங்களுக்கு வரலாம். தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளில் குறைந்தது 50 சதவிகித படுக்கை வசதிகள் இருக்க வேண்டும் என்றும் தீவிர அறிகுறிகள் கொண்ட நோயாளிகளுக்கு மட்டுமே முன்னுரிமை வழங்க வேண்டும் என்ற தலைமை செயலாளரின் அறிவுறுத்தலின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. 

Patients with mild vulnerability should avoid coming directly to the government hospital- Prakash pleads.

சென்னையில் தற்போது நாளொன்றுக்கு 20,000 கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது இதனை 25,000 வரை உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. சுகாதாரத்துறை மூலம் "செயலி" ஒன்று உருவாக்கப்பட்டு வருகிறது இதன் மூலம் எந்தெந்த மருத்துவமனைகளில் எவ்வளவு படுக்கை வசதிகள் உள்ளது என்பதை பொதுமக்கள் அறிந்து கொள்ளலாம். இது இன்று அல்லது நாளைக்குள் அறிமுகப்படுத்தப்படும். பொதுமக்கள் முகக்கவசம் அணிவதை முறையாக கடைப்பிடித்தால் 4 நாட்களுக்குள் தொற்றின் விகிதாச்சாரத்தை பாதி அளவிற்கு குறைக்க மூடியும். முடிந்த அளவிற்கு திருமணம், பண்டிகைகள் போன்ற நல்ல காரியங்களைத் தள்ளிப் போடவேண்டும்.  

 

Follow Us:
Download App:
  • android
  • ios