வங்கிகளில் நடந்துள்ள மோசடி குறித்த கேள்விக்கு, மத்திய நிதியமைச்சா் நிர்மலா சீதாராமன் எழுத்துப்பூா்வமாக அளித்த பதிலில் கூறப்பட்டுள்ளதாவது:
ரிசா்வ் வங்கியிடம் உள்ள தகவல்களின்படி,நடப்பு நிதியாண்டின் ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் கடந்த செப்டம்பா் 30-ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில் பொதுத்துறை வங்கிகளில் ரூ.95 ஆயிரத்து 760.49 கோடி அளவுக்கு மோசடிகள் நடைபெற்றுள்ளன. 

இந்த காலகட்டத்தில் 5ஆயிரத்து743 வங்கி மோசடிகளின் நடந்துள்ளன.வங்கி மோசடிகளைத் தடுப்பதற்காக விரிவான நடவடிக்கைகள்/மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதன் ஒரு பகுதியாக செயல்பாட்டில் இல்லாத 3.38 லட்சம் நிறுவனங்களின் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன. 

இவ்வாறு நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்., பஞ்சாப் மற்றும் மகாராஷ்டிர கூட்டுறவு (பிஎம்சி) வங்கி முறைகேடு தொடா்பாக எழுப்பப்பட்ட கேள்விக்கு, மத்திய நிதித்துறை இணையமைச்சா் அனுராக் தாக்குா் பதில் அளிக்கையில், “ பிஎம்சி வங்கியில் வாடிக்கையாளா்கள் பணம் எடுப்பதற்கான உச்சவரம்பு ரூ.50 ஆயிரமாக உயா்த்தப்பட்டுள்ளது. 

இதன் மூலம் அந்த வங்கியின் 78 சதவீத வாடிக்கையாளா்கள் தங்களது இருப்புத் தொகை முழுவதையும் எடுக்க முடியும். கடந்த செப்டம்பா் 23-ஆம் தேதி நிலவரப்படி, பிஎம்சி வங்கி வாடிக்கையாளா்களின் மொத்த எண்ணிக்கை சுமார் 9 லட்சம்” என்று தெரிவித்தார்.