அதிமுக தற்போது யாரோடும் கூட்டணி வைக்கவில்லை என்றும், பாஜகவுடன் அதிமுக கூட்டணி என்ற மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலேவின் கருத்தை பெரிதாக எடுத்துக் கொள்ளத் தேவையில்லை என்றும் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் 123வது பிறந்தநாளை முன்னிட்டு, சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அவரது சிலைக்கு கீழே உள்ள புகைப்படத்திற்கு, அமைச்சர்கள் ஜெயக்குமார், கடம்பூர் ராஜு, மாஃபா பாண்டியராஜன், பெஞ்சமின் ஆகியோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார் அதிமுக தற்போது வரை யாரோடும் கூட்டணி வைக்கவில்லை என்று கூறியுள்ளார். பாஜகவை விமர்சிக்கும் தம்பிதுரையின் கருத்து தனிப்பட்ட கருத்தே, அதிமுகவின் கருத்து அல்ல. பாஜகவுடன் அதிமுக கூட்டணி என்ற மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே கருத்தை பெரிதாக எடுத்துக் கொள்ளத் தேவையில்லை என தெரிவித்தார்.
ராம்தாஸ் அத்வாலே பாஜகவைச் சேர்ந்தவர் இல்லை என்பதை சுட்டிக்காட்டினார். அனைத்துக்கும் அதிமுக ஜால்ரா அடிக்காது, அன்ன பறவை போல் பிரித்துப் பார்க்கும் அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.
Read Exclusive COVID-19 Coronavirus News updates, at Asianet News Tamil.
மெய்நிகர் போட் ரேசிங் கேம் ஆடுங்கள் மற்றும் சவாலுக்கு உட்படுத்தி கொள்ளுங்கள். கிளிக் செய்து விளையாடுங்கள்
Last Updated Jan 23, 2019, 10:48 AM IST