Asianet News Tamil

யார் ஜெயித்தாலும் வைகோ ஜெயிக்க கூடாது... டெல்லியின் ஒன்லைன் ஆர்டர்! டெரர் தாக்குதலில் தமிழக பி.ஜே.பி.!!

தமிழ்நாட்டில் நாம் ஜெயிக்கணும், ஜெயிப்போம் அது வேற கதை. ஆனால் தி.மு.க. கூட்டணியில் யார் ஜெயித்தாலும், தோற்றாலும் கவலையில்லை....வைகோ போட்டியிட்டால் அவர் தோற்றே ஆகணும். ஒருவேளை அவர் நிற்காமல் ம.தி.மு.க.வுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதியில் அவரது கட்சிக்காரர்கள் யார் நின்றாலும் அவரை தோற்கடிக்க வேண்டும். 

Parliment election... BJP target vaiko
Author
Tamil Nadu, First Published Jan 28, 2019, 4:15 PM IST
  • Facebook
  • Twitter
  • Whatsapp

கடந்த நாடாளுமன்ற தேர்தலில் தேசமெங்கிலும் மோடி அலை கரைதாண்டி வீசி கர்ஜித்தது. தமிழகத்தில் கைநிறைய கட்சிகளுடன் பெரிய வெயிட்டான கூட்டணியை உருவாக்கியிருந்தது அக்கட்சி. கூட அவ்வளவு அமோகத்திலும் தமிழ்நாட்டில் பி.ஜே.பி.க்கு கிடைத்தது என்னவோ ஒரேயொரு சீட் வெற்றிதான். இது போக சொந்த செல்வாக்கில் அன்புமணி வென்றார்!  

பி.ஜே.பி. ஆட்சி பொறுப்பேற்றபின் தமிழகத்துக்கு நெருடலான பாதையில் அவர்கள் பயணிப்பதாய் கூறி மிக கடுமையான கோபத்துடன் வைகோ வெளியே வந்தார். ராஜபக்‌ஷேவுக்கு இந்தியாவில் சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்ட போது, மோடியை நோக்கி வைகோ உதிர்த்த வார்த்தைகள் கொதிப்பானவை. எதற்கெடுத்தாலும் ‘பாசிச பா.ஜ.க. அரசே!’ என்று போட்டுப் பொளப்பதையே வைகோ வேலையாக வைத்திருந்தார். 

என்றுமே எதிரியாக இருக்கும் தி.மு.க. திட்டுவதை விட, நட்பிலிருந்து விலகிப் போன வைகோ கொட்டும் வார்த்தைகள்தான் மோடி டீமை ஏகத்துக்கும் எரிச்சலும், கோபமும் கொள்ள வைத்தன. அதிலும் அடுத்து தி.மு.க. கூட்டணிதான் என்று முடிவு செய்துவிட்ட பிறகு வைகோ ஏவும் அஸ்திரங்கள் மோடி, அமித்ஷா தரப்பை அநியாயத்துக்கு ரணப்படுத்துகின்றன என்று தகவல். தங்கள் கூட்டணி வெல்ல வேண்டும் எனும் வேகத்தில் முக்கிய எதிராளியான பி.ஜே.பி.யை மிக வன்மையாக வைகோ சாடி தள்ளுவதாக மத்திய உளவுத்துறையே ஸ்பெஷல் நோட் வைத்துள்ளது.

 

விளைவு, சமீபத்தில் தமிழக பி.ஜே.பி.தலைவர்கள் சிலரை அழைத்த டெல்லி பவர் சென்டர் ஒன்று ”தமிழ்நாட்டில் நாம் ஜெயிக்கணும், ஜெயிப்போம் அது வேற கதை. ஆனால் தி.மு.க. கூட்டணியில் யார் ஜெயித்தாலும், தோற்றாலும் கவலையில்லை....வைகோ போட்டியிட்டால் அவர் தோற்றே ஆகணும். ஒருவேளை அவர் நிற்காமல் ம.தி.மு.க.வுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதியில் அவரது கட்சிக்காரர்கள் யார் நின்றாலும் அவரை தோற்கடிக்க வேண்டும். மொத்தத்தில் ம.தி.மு.க.வுக்கு வெற்றியே கிடைக்க கூடாது. வழக்கம்போலவே ‘அதிர்ஷ்டமில்லாத கட்சி’ன்னு அது பேர் வாங்கணும். 

இதெல்லாமே சாதாரணமாக நடக்க கூடாது. வைகோவை பற்றி தொடர்ந்து சாடுங்கள், அவரோட தவறுகளை, சறுக்கல்களை, கூட்டணி மாறும் குணத்தை சாடுங்கள். நாமாக இல்லாமல் மக்களாகவே ம.தி.மு.க.வை வெறுக்கும் நிலையை உருவாக்குங்கள்.” என்றார்களாம். இதன் நீட்சியாகத்தான், நேற்று மதுரையில் வைகோவை வறுத்தெடுத்துவிட்டார் தமிழிசை. மோடி வருகையை எதிர்த்து கறுப்பு பலூன் பறக்கவிட்ட வைகோவை சுட்டிக்காட்டி...’இந்த மண்ணை தன்னுடைய மண் என்று பெருமை பேசிக்கொள்வார் வைகோ. 

ஆனால் மதுரை எய்ம்ஸில் சொந்த தொகுதி மக்களே மருத்துவம் பெறுவதை விரும்பாமல், இந்த திட்டத்தை எதிர்க்கிறார், அசிங்கப்படுத்துகிறார். மக்கள் நல திட்டத்தை எதிர்க்கும் வைகோவை மக்கள் மன்னிக்கவே மாட்டார்கள். அவருக்கு அரசியலில் எந்நாளும் வீழ்ச்சிதான்.” என்று வெளுத்துவிட்டார். தமிழிசை துவக்கியிருக்கும்  இந்த டெரர் தாக்குதல் தொடரும் என்கிறார்கள். ஹும்!  எப்படி பதில் தாக்குதலை நடத்தப்போகிறதோ இந்த கறுப்புப் புயல்?

Follow Us:
Download App:
  • android
  • ios