சர்வதேசமும் இந்தியாவின் 2019 நாடாளுமன்ற தேர்தலை எதிர்நோக்கி காத்திருக்கின்றன. காரணம், கடந்த 5 ஆண்டுகளில் உலகின் பெரும்பாலான நாடுகளுக்கு சுற்றுப்பயணம் சென்றுவிட்டதன் மூலம் சர்வ நாடுகளையும் இந்தியாவை கவனிக்க வைத்துள்ளார் மோடி. அவரது இண்டர்நேஷனல் விசிட் மூலம் நாட்டுக்கு நன்மை கிடைத்ததா? இல்லையா! என்று கேட்பீர்களேயானால்...அதற்கான விவாதம் இதில் இல்லை. 

இவ்வளவு பெரிய மோடி, இந்தியாவின் பிரதமர் எனும் தன் பதவியை தக்க வைக்கப்போகிறாரா? அல்லது இழக்கப்போகிறாரா! என்பதை நிர்ணயிக்கும் நாள்தான் நாடாளுமன்ற தேர்தல் நடக்கும் நாள். இந்த தேர்தலின் தேதியை அறிந்து கொள்வதில்தான் கோடான கோடி மக்களுக்கும், பல்லாயிரக்கணக்கான அரசியல் தலைவர்களுக்கும் ஆர்வமே. 

இந்திய தலைமை தேர்தல் கமிஷனும் நாடாளுமன்ற தேர்தலுக்கான  பணிகளில் விறுவிறுவென களமிறங்கி பரபரத்துக் கொண்டிருக்கிறது பணிகளில். கிட்டத்தட்ட அனைத்து துறைகளின் தலைமை அதிகாரிகளுடனும் தொடர்ந்து ஆலோசனை கூட்டங்களை நடத்தி, தேர்தலுக்காக முழு வீச்சில் தயாராகிக் கொண்டிருக்கிறார்கள். 

இந்நிலையில், தேர்தல் தேதி என்ன?! எனும் பில்லியன் டாலர் கேள்விக்கு, அரசல் புரசலாக ஒரு விடை கிடைத்திருக்கிறது. அதாவது வரும் மார்ச் 5-ம் தேதியன்று தேர்தல் அட்டவணையை அறிவிக்கும் முடிவை எடுத்துள்ளதாம் தேர்தல் கமிஷன். அநேகமாக அன்று தேதிகள் வெளியாகிவிடலாம். இந்நிலையில், தேர்த்ல் அட்டவணையை அறிவிக்க இந்த தேதியை முடிவெடுத்ததற்காக மோடி மீதும் தேர்தல் கமிஷன் மீதும் பாய்கின்றன எதிர்க்கட்சிகள். 

ஏன்? என்று கேட்டால்.... “மார்ச் 5-ம் தேதியன்று மஹாசிவராத்திரி. அந்த நாள் சிவனுக்கு மிக மிக பிரத்யேக விசேஷமான நாள். சிவனின் பக்தர் மோடி. ஆக அன்று தேர்தல் அட்டவணையை செண்டிமெண்டாக அறிவிக்க வைத்து, தனது வெற்றிக்கு வழி தேடுகிறார் பிரதமர், இதற்கு தேர்தல் கமிஷனும் துணை போகிறது!” என்று கொளுத்திப் போட்டுள்ளனர். இந்த சர்ச்சை ஒரு புறம் இருக்க, தென்னிந்தியாவை பொறுத்தவரையில் நமக்கும், ஆந்திராவுக்கும் ஒரே நாளில் தேர்தல் நடத்தப்படும் என்று தகவல். அதிகார மட்டங்களில் பரபரப்பாக அலசப்படும் இந்த தகவல் உண்மையா? சிவராத்திரி வரைக்கும் பொறு மனமே!