Asianet News TamilAsianet News Tamil

சிக்கியது வீடியோ ஆதாரம்... கனிமொழிக்கு ஆப்பு உறுதி..!

தூத்துக்குடி மக்களவைத் தேர்தலில் திமுக வேட்பாளர் கனிமொழியின் வெற்றியை எதிரித்து தமிழிசை சவுந்தரராஜன் வழக்கு தொடுத்துள்ளார். இந்த வழக்கில் திமுக எம்.பி. கனிமொழி பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

parliamentary election...chennai high court notice to kanimozhi
Author
Tamil Nadu, First Published Sep 5, 2019, 11:42 AM IST

தூத்துக்குடி மக்களவைத் தேர்தலில் திமுக வேட்பாளர் கனிமொழியின் வெற்றியை எதிரித்து தமிழிசை சவுந்தரராஜன் வழக்கு தொடுத்துள்ளார். இந்த வழக்கில் திமுக எம்.பி. கனிமொழி பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

தமிழகத்தில் நடத்து முடிந்த மக்களவை தொகுதியில் திமுக கூட்டணி 37 இடங்களிலும், அதிமுக மெகா கூட்டணி அமைத்தும் ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் மட்டும் தேனி தொகுதியில் வெற்றி பெற்றார். இந்நிலையில் தூத்துக்குடி தொகுதியில் திமுக வேட்பாளராக கனிமொழி போட்டியிட்டு சுமார் 3 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் தமிழிசையை தோற்கடித்தார். இதனிடையே, தேர்தல் வெற்றியை எதிர்த்து 45 நாட்களுக்குள் வழக்கு தொடர வேண்டும் என்பதால், உயர்நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன. parliamentary election...chennai high court notice to kanimozhi

இந்நிலையில், பாஜக வேட்பாளர் தமிழிசை தூத்துக்குடியில் கனிமொழி பெற்ற வெற்றியை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதில், ஆர்த்தி எடுத்தவர்களுக்கு திமுக தரப்பில் பணம் கொடுக்கப்பட்டதாக தமிழிசை குற்றம்சாட்டியுள்ளார். மேலும், குறைபாடான வேட்புமனுவை தாக்கல் செய்ததாக மனுவில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான வீடியோ ஆதாரங்கள் தம்மிடம் உள்ளதாகவும் மனுவில் தெரிவித்திருந்தார்.

parliamentary election...chennai high court notice to kanimozhi

இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்த போது திமுக எம்.பி.கனிமொழியும், தேர்தல் ஆணையமும் 23-ம் தேதிக்குள் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தது. 

Follow Us:
Download App:
  • android
  • ios