Asianet News TamilAsianet News Tamil

அன்று 4,500... இன்று 1,737... அதிமுகவில் விருப்ப மனுக்கள் குறைந்தது ஏன்?

தற்போதைய சிட்டிங் எம்.பி.கள், முன்னாள் எம்.பி.களில் யாரெல்லாம் தேர்தலில் போட்டியிட விருப்ப மனு தாக்கல் செய்தனர் என்ற விவரம் தெரியவில்லை. ஆனால், நிர்வாகிகள் பலரும் தேர்தலில் போட்டியிட ஆர்வம் காட்டவில்லை என்றே அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

Parliament Election...AIADMK Optional petition
Author
Tamil Nadu, First Published Feb 15, 2019, 5:41 PM IST

நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட அதிமுக சார்பில் குறைவான விருப்ப மனுக்களே பெறப்பட்டன.   

நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட கடந்த 4-ஆம் தேதி முதல் 9-ஆம் தேதி வரை பெறப்படும் என அதிமுக தலைமை அறிவித்தது. ஆனால், 5 நாட்களில் 1300 பேர் மட்டுமே விருப்ப மனு அளித்திருந்தார்கள். இதனால் விருப்ப மனு பெறுவதற்கான காலகெடுவை 14-ஆம் தேதி வரை அதிமுக தலைமை நீடித்தது. விருப்ப மனு அளிப்பதற்கான காலகெடு முடிந்த நிலையில், தேர்தலில் போட்டியிட 1,737 பேர் விருப்பமனு தாக்கல் செய்துள்ளதாக தெரியவந்துள்ளது. Parliament Election...AIADMK Optional petition

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட விரும்பியவர்களை விட தற்போது சுமார் 2 மடங்கு எண்ணிக்கை குறைந்துவிட்டது. 2014 நாடாளுமன்றத் தேர்தலின் போது சுமார் 4,500-க்கு மேற்பட்ட விருப்ப மனுக்கள் அதிமுக சார்பில் பெறப்பட்டன. அவற்றில் 1,500 மனுக்கள் ஜெயலலிதா தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்து அதிமுகவினர் விருப்ப மனு தாக்கல் செய்தனர். Parliament Election...AIADMK Optional petition

ஆனால், இந்த முறை 1737 விருப்பமனு மட்டுமே பெறப்பட்டுள்ளது. கடந்த 9-ஆம் தேதி வரை 1300 விருப்ப மனுக்கள் பெறப்பட்ட நிலையில், கால நீட்டிப்புக்கு பிறகு சுமார் 447 பேர் மட்டுமே கூடுதலாக விருப்ப மனுவை அளித்திருக்கிறார்கள். தற்போதைய சிட்டிங் எம்.பி.கள், முன்னாள் எம்.பி.களில் யாரெல்லாம் தேர்தலில் போட்டியிட விருப்ப மனு தாக்கல் செய்தனர் என்ற விவரம் தெரியவில்லை. ஆனால், நிர்வாகிகள் பலரும் தேர்தலில் போட்டியிட ஆர்வம் காட்டவில்லை என்றே அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. Parliament Election...AIADMK Optional petition

தேர்தல் செலவு, வெற்றி கிடைக்குமா என்ற சந்தேகம் போன்ற காரணங்களால் அதிமுக நிர்வாகிகள் பலரும் தேர்தலில் போட்டியிட ஆர்வம் காட்டவில்லை என்று கூறப்படுகிறது.

Follow Us:
Download App:
  • android
  • ios