Asianet News TamilAsianet News Tamil

பட்ஜெட் நாளில் நாடாளுமன்றம் முற்றுகை போராட்டம் ரத்து... டெல்லி வன்முறையால் விவசாய சங்கங்கள் அதிரடி முடிவு..!

மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டத்தின் ஒரு பகுதியாக, பட்ஜெட் நாளில் நாடாளுமன்றத்தை நோக்கி நடத்தவிருந்த பேரணியை விவசாய சங்கங்கள் ரத்து செய்துள்ளனர்.

Parliament cancels siege protest on budget...Agricultural Associations Announcement
Author
Delhi, First Published Jan 28, 2021, 2:37 PM IST

மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டத்தின் ஒரு பகுதியாக, பட்ஜெட் நாளில் நாடாளுமன்றத்தை நோக்கி நடத்தவிருந்த பேரணியை விவசாய சங்கங்கள் ரத்து செய்துள்ளனர்.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 புதிய வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி தலைநகர் டெல்லியில் விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று முன்தினம் குடியரசு தினத்தன்று டெல்லியில் விவசாயிகள் நடத்திய டிராக்டர் பேரணி போலீசாருக்கும் விவசாயிகளுக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டு  வன்முறை வெடித்தது. பின்னர், செங்கோட்டையில் நுழைந்த விவசாயிகள் தங்கள் அமைப்பின் கொடியையும் ஏற்றினர். இதில், விவசாயி ஒருவர் உயிரிழந்தார்.

Parliament cancels siege protest on budget...Agricultural Associations Announcement

இந்த வன்முறைகள் தொடர்பாக பல்வேறு விவசாய சங்க தலைவர்கள் மீது 25 வழக்குகளை பதிவு செய்துள்ளது டெல்லி காவல்துறை. வன்முறை தொடர்பாக 19 பேரை கைது செய்துள்ளது. விவசாய சங்க நிர்வாகிகளிடம் விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளனர். டிராக்டர் பேரணி வன்முறையில் முடிந்ததால் விவசாய சங்க நிர்வாகிகள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அடுத்து பிப்ரவரி 1ம் தேதி மத்திய பட்ஜெட் தாக்கலின்போது நாடாளுமன்றத்தை நோக்கி நடத்தவிருந்த பேரணியை விவசாய சங்கங்கள் ரத்து  செய்துள்ளன. 

Parliament cancels siege protest on budget...Agricultural Associations Announcement

அதேசமயம் போராட்டத்தை தொடரப்போவதாகவும் விவசாய சங்கங்கள் கூறி உள்ளன. மகாத்மா காந்தி நினைவு நாளான 30ம் தேதி நாடு முழுவதும் அமைதியான முறையில் வேளாண் சட்டங்களுக்கு எதிராக பொதுக்கூட்டங்கள், உண்ணாவிரத போராட்டங்கள் நடத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளன. விவசாயிகளின் டிராக்டர் பேரணி வன்முறை வெடித்ததால் போராட்டத்தில் இருந்து இரண்டு விவசாய சங்கங்கள் விலகியது குறிப்பிடத்தக்கது. 

Follow Us:
Download App:
  • android
  • ios