மீண்டும் பெரம்பலூருக்கே தூக்கியடிக்கப்பட்ட பாரிவேந்தர் ... பொன்முடி மகனுக்காக நடந்த உள்ளடி வேலைகள்!!
திமுக அணியில் ஐக்கியமான பாரிவேந்தருக்கு கள்ளக்குறிச்சி கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையில், தேர்தல் வேலைகள் அதாவது போஸ்டர், பேனர் என அனைத்து வேலைகளையும் ஆரம்பித்து தடபுடலாக செய்துவந்த நிலையில் மீண்டும் பெரம்பலூருக்கே தூக்கியடிக்கப்பட்டுள்ளார்.
திமுக அணியில் ஐக்கியமான பாரிவேந்தருக்கு கள்ளக்குறிச்சி கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையில், தேர்தல் வேலைகள் அதாவது போஸ்டர், பேனர் என அனைத்து வேலைகளையும் ஆரம்பித்துள்ள தடபுடலாக வேலைகளை செய்துவந்த நிலையில் மீண்டும் பெரம்பலூருக்கே தூக்கியடிக்கப்பட்டுள்ளார்.
திமுக கூட்டணியில் பாரிவேந்தரின் இந்திய ஜனநாயக கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அக்கட்சி உதய சூரியன் சின்னத்தில் போட்டியிடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதிமுக அணியில் பாமக இணைந்துள்ள காரணத்தால் திமுக திமுகவுடன் பாரிவேந்தரின் இந்திய ஜனநாயக கட்சி பேச்சுவார்த்தை நடத்தி வந்தது. இந்த நிலையில், இந்திய ஜனநாயக கட்சிக்கு ஒரு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. பாரிவேந்தரின் கட்சி போட்டியிட போவது கள்ளக்குறிச்சியா அல்லது ஏற்கனவே போட்டியிட்டு தோல்வியை தழுவிய பெரம்பலூரா என குழப்பம் நீடித்தது.
தொகுதி ஒதுக்கீட்டு உடன்படிக்கையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினும், இந்திய ஜனநாயக கட்சியின் தலைவர் ரவி பச்சமுத்துவும் கையெழுத்திட்ட கள்ளக்குறிச்சியை விருப்ப தொகுதியாக பாரிவேந்தர் கட்சி கேட்டது. உதய சூரியன் சின்னத்திலேயே போட்டியிட சம்மதித்தனர்.
பாரிவேந்தர் கட்சிக்கு கள்ளக்குறிச்சி தொகுதி ஒதுக்கப்படுவது கிட்டத்தட்ட உறுதியாக சொல்லப்பட்ட நிலையில் முன்னாள் அமைச்சரும் விழுப்புரம் மத்திய மாவட்டச் செயலாளருமான பொன்முடி தனது மகன் கௌதம சிகாமணியை கள்ளக்குறிச்சி தொகுதியில் நிறுத்த தீவிர முயற்சி எடுத்து வந்ததும், விழுப்புரம் மாவட்டத்தில் இருக்கும் பல்வேறு ஒன்றிய செயலாளர்களை தனிப்பட்ட முறையில் பார்த்து தன் மகனுக்கு ஆதரவு திரட்டி வந்தார்.
அதேநேரம் பொன்முடி மகனுக்கு கள்ளக்குறிச்சி சீட் கிடைத்து எம்பி. ஆகிவிட்டால் பொன்முடியின் அதிகாரம் மீண்டும் விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் பரவிவிடும் என பிளான் போட்டு வந்தார். இந்த சமயத்தில் தான் கள்ளக்குறிச்சியில் பொன்முடி மகன் நிற்பதைத் தடுக்கும் விதமாக பாரிவேந்தருக்கு கிடைத்து விட்டால் பொன்முடி ராஜ்ஜியத்தில் ஆட்டை களைத்துவிடும் என நினைத்த எதிர்ப்பாளர்களுக்கும் அப்படிக்கும் விதமாக. பொன்முடி தரப்பினரோ பாரிவேந்தருக்கு பெரம்பலூர் தொகுதியை ஒதுக்கிவிட வேண்டும் என்றும், அப்போதுதான் கள்ளக்குறிச்சியை பெற முடியும் என்றும் முயற்சி எடுத்தனர்.
நினைத்ததைப்போலவே, பொன்முடி மகனுக்கு கள்ளக்குறிச்சி கிடைத்துவிடக் கூடாது என்று நினைத்த சிலரின் கனவு தவிடு பொடியாகும் விதமாக, பாரிவேந்தருக்கு அவர் முன்பு போட்டியிட்டு தோற்ற பெரம்பலூர் தொகுதியே கொடுக்கப்பட்டுவிட்டதாம்.
அதுமட்டுமல்ல கள்ளக்குறிச்சி பகுதிகளில் பாமக மற்றும் விஜயகாந்த் கட்சிக்கு வாக்கு வங்கி பலமாக இருப்பதால், பாரிவேந்தரால் சமாளிக்க முடியாமல் போனால் ஒரு தொகுதி அனாமத்தா போய் விடுமோ என அஞ்சிய திமுக, முன்னாள் அமைச்சர் பொன்முடி மகனை நிற்க வைத்தால் மட்டுமே அந்த தொகுதியை கைப்பற்ற முடியும் என நினைக்கிறதாம்.