panneerselvam son meet venkaiah naidu

சசிகலா குடும்பத்தின் பிடியிலிருந்து தப்பிக்க, பன்னீருடன் கைகோர்த்த எடப்பாடியார், சரிசமமாக பதவிகளை பங்குபோட்டுக் கொண்டனர். ஆனாலும் எடப்பாடியார் தங்களை யாருமே மதிப்பதில்லை என பன்னீரும் தனது ஆதரவாளர்களுடன் புலம்பியிருக்கிறார்.

கடந்த வாரம் சென்னை வந்திருந்தார் வெங்கய்யா. அப்போது துணை முதல்வர் ஓ.பன்னீரின் மகனான ரவீந்திரநாத் வெங்கய்யாவை முன்கூட்டியே அப்பாயின்ட்மென்ட் வாங்கி சந்தித்தார்.

தான் தனிப்பட்ட முறையில் வெங்கய்யாவை சந்தித்தால் விஷயம் பெரிதாக வெடிக்கும் என்பதால்தான் தன் மகனை அனுப்பி வைத்தாராம் ஓ.பன்னீர். வெங்கய்யாவை சந்தித்த ஓ.பன்னீரின் மகன், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீது அடுக்கடுக்கான புகார்களை வாசித்தாராம்.

’எங்களை எடப்பாடி மதிப்பதே இல்லை, கட்சியை அவர் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு செல்ல பல முயற்சிகளை எடுக்கிறார், நீங்களெல்லாம் அன்று சொன்னதால்தான் எங்க அப்பா அணிகளை இணைத்தார். ஆனால் இப்போது எங்க அப்பாவுக்கு மரியாதையே இல்லை’ என்று ஓ.பி.ரவீந்திரநாத் சொன்ன புகார்களை எல்லாம் கேட்டுக்கொண்டு அவரை அனுப்பி வைத்தாராம் வெங்கய்யா.

ஜெயலலிதா இறந்த கால கட்டத்தில் தமிழகத்தின் குறிப்பாக அதிமுகவின் அரசியல் நிலவரங்களை கவனிக்கும் பொறுப்பை அப்போது மத்திய அமைச்சராக இருந்த வெங்கய்யா நாயுடுவிடம் கொடுத்திருந்தார் மோடி. அதனால் பன்னீர் குரூப்புடன் நல்ல தொடர்போடு இருந்தார் வெங்கையா. அவர் துணை ஜனாதிபதி ஆன நிலையிலும் தமிழகத்திலுள்ள பன்னீர் அணியினர் வெங்கய்யாவை பழைய பாசத்துடனே அணுகி வருகின்றனர். அதனால் தான் தனது மானகை அனுப்பு புகார் பட்டியலை வாசிக்க வைத்துள்ளார் பன்னீர் செல்வம்.