சென்னை கிளாம்பாக்கத்தில் தற்போது நடைபெற்று வரும் அதிமுக பாஜக பிரச்சார கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி  கலந்துகொண்டு உள்ளார்.

இந்த கூட்டத்தில் , முதல்வர் பழனிசாமி,துணை முதல்வர் பன்னீர் செல்வம், தமிழக பாஜக தலைவர் தமிழிழை சவுந்தர ராஜன், மத்திய அமைச்சர் பியூஸ் கோயல்,அமைச்சர் பொன் ராதா கிருஷ்ணன், பாஜக தேசிய செயலாளர் எச். ராஜா, மற்றும்  முரளிதர் ராவ், பாமக அன்புமணி ராமதாஸ், ராமதாஸ்,  ஜான் பாண்டியன், புதிய தமிழக கட்சித்தலைவர் கிருஷ்ணஸ்வாமி,  பூவை ஜெகன் மூர்த்தி உள்ளிட்ட பல முக்கிய அரசியல் தலைவர்கள்  கலந்துக்கொண்டு உள்ளனர்.

இந்த கூட்டத்தில் உரை நிகழ்த்திய ஓபிஎஸ், எதிர்க்கட்சிகளுக்கு பல்வேறு கேள்விகளை எழுப்பி விளாசி உள்ளார்

அப்போது, நரேந்திர மோடி பிரதமராக வேண்டும் என இந்திய நாடே சொல்கிறது.. மீண்டும் மோடி மத்தியில் ஆள  வேண்டும் என ஒட்டு மொத்த இந்திய  மக்களும் ஆதரவு தெரிவித்து உள்ளனர்.

தமிழகழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி அளித்தது  மோடி அரசு என்றும்,  தீவிரவாத அமைப்புகளுக்கு எதிராக  சிம்ம சொப்பனமாக  திகழ்ந்து வருகிறார் மோடி. தர்மத்திற்கும் அதர்மத்திற்கும் இடையே நடைபெற  கூடிய தேர்தல் தான் வரும் மக்களவை தேர்தல் என்றும், எதிர்கட்சிகளால யார் பிரதமர் வேட்பாளர் என்று  சொல்ல முடியுமா..? சொல்ல கூடிய  தைரியமும் இல்லை.. பிரதமர் வேட்பாளர் யார் என்று அறிவிக்கக்கூட  முடியாத அளவிற்கு குழப்பமான சூழல் தான்   எதிர்கட்சியிடம் உள்ளது  என  பல்வேறு  கேள்விகளை எழுப்பி  ஓபிஎஸ் உரையை முடித்துக்கொண்டார்