நடக்கவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாமகவும் தேமுதிகவும் இணைந்ததை அடுத்து, தேமுதிக தலைவர் விஜயகாந்தை ராமதாஸ் நேரில் சந்தித்து  நலம் விசாரித்தார்.  இந்நிலையில் தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் பண்ருட்டி வேல்முருகன் திமுகவிற்கு ஆதரவு தெரிவித்திருந்த நிலையில்  செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

அப்போது பேசிய வேல்முருகன்;  நான் இப்படியெல்லாம் பேசுறேன்னு என்று  நினைக்காதீங்க.  பல விஷயம் தெரியணும் என்பதற்காக சொல்கிறேன்.   விஜயகாந்துன்னு ஒரு குடிகார நா... இருக்குறான்.  அந்த குடிகாரன் வடதமிழ்நாட்டில் எங்குபார்த்தாலும் கொடி ஏத்துறான்.  இந்த "குடிகார......."  ஊர் ஊரா அவனுக்கு கொடி கட்டுறானுங்க.   நீ என்ன பண்ணுற வேலு... நீதான் தளபதி... நீதான் இந்த கட்சி... உன்னை நம்பித்தான் நானே  இருக்கிறேன்.  

வடதமிழ்நாட்டில் எங்கும் விஜயகாந்த் கட்சி கொடி பறக்கக்கூடாது என்பதுதான் ராமதாஸ் எனக்கு கொடுத்த அசைன்மெண்ட். விஜயகாந்தை மட்டுமல்ல சொந்த இன மக்களையும் அத்தனை இழிவாக பேசினார்.  

நான் போய் அந்த கொடியையெல்லாம் அவிழ்க்கச்சொல்லி, கொடி கம்பத்தை அறுத்து வீசி எறிந்தேன்.. விஜயகாந்த் தொண்டர்களூடன் சண்டை போட்டு... நான் இன்றைக்கு விஜயகாந்துக்கும் அவரது கட்சிக்கும் எதிரி எனப் பேசினார்.        

தொடர்ந்து பேசிய அவர்; விஜயகாந்த் உடன் சட்டமன்றத்தில் ஐந்து ஆண்டுகாலம் பழகியிருக்கிறேன்.  எந்தவித சூதுவாதும் இல்லாமல் சட்டமன்றத்தில் என்னிடம் வந்து சட்டமன்ற நடவடிக்கைகள் என்ன என்று என்னிடம் கேட்டார்.  சட்டமன்றத்தில் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம். எப்படி கேள்வி கேட்க வேண்டும் என்றெல்லாம் வெகுநேரம் என்னிடம் கலந்துரையாடினார்.

  

இன்றைக்கு உடல்நிலை சரியில்லாமல் இருக்கிறார். விஜயகாந்த் நல்ல மனம் படைத்த மனிதர். விஜயகாந்த் தனது சொந்த பணத்தில் ஏழைகளுக்கு உதவிகள் செய்திருக்கிறார். ஆனால், நான் கடவுளாக வணங்கிய  ராமதாஸ் ஒவ்வொரு மாநாட்டிற்கும், ஒவ்வொரு கூட்டத்திற்கும் வன்னியர்களின் ரத்தத்தை உறிஞ்சிக் கொண்டிருக்கிறார் என்று தெரிவித்தார்.