Asianet News TamilAsianet News Tamil

ஜெயலலிதா நியமித்த அத்தனை பதவிகளும் ஒரே கையெழுத்தில் காலி.. அதிர்ச்சியில் அதிமுக நிர்வாகிகள்..!

அதிமுகவுக்கு கிராமங்களில் கணிசமான ஓட்டுவங்கி எம்ஜிஆர் காலத்தில் இருந்தது. அது ஜெயலலிதா காலத்தில் ஓரளவு தொடர்ந்தது. 2019-ம் ஆண்டு நடந்த மக்களவை தேர்தலில், அதன் பிறகு நடந்த ஊரக உள்ளாட்சித் தேர்தலிலும் கிராமப்புறங்களில் அதிமுக ஓட்டு வங்கி அதலபாதளத்திற்கு சென்றது.  

panchayat secretary All posts appointed by Jayalalithaa
Author
Tamil Nadu, First Published May 20, 2020, 2:07 PM IST

மறைந்த முதல்வர் ஜெயலலிதா நியமித்த அத்தனை பதவிகளையும் ஒரே கையெழுத்தில் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் நீக்கியுள்ள சம்பவம் நிர்வாகிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

அதிமுகவுக்கு கிராமங்களில் கணிசமான ஓட்டுவங்கி எம்ஜிஆர் காலத்தில் இருந்தது. அது ஜெயலலிதா காலத்தில் ஓரளவு தொடர்ந்தது. 2019-ம் ஆண்டு நடந்த மக்களவை தேர்தலில், அதன் பிறகு நடந்த ஊரக உள்ளாட்சித் தேர்தலிலும் கிராமப்புறங்களில் அதிமுக ஓட்டு வங்கி அதலபாதளத்திற்கு சென்றது.  இதற்கு கட்சியின் ஊராட்சி செயலாளர்கள் அதிகாரம் படைத்தவர்களாக இருப்பதும், கிளைக் கழகச் செயலாளர்களை கண்டு கொள்வதே இல்லை என்ற குற்றச்சாட்டும் கட்சி தலைமைக்கு தொடர்ந்து சென்றுக்கெண்டிருந்தது. எனவே, வரப்போகும்,  உள்ளாட்சித் தேர்தல், சட்டப்பேரவை தேர்தலில்  கட்சியை கிராமப்புற அளவில் பலப்படுத்த வேண்டும்.

panchayat secretary All posts appointed by Jayalalithaa

அதற்கு முதலில் ஊராட்சி செயலாளர் பதவிகள் நீக்கிவிட்டு, கிளைக் கழகச் செயலாளர்களையும் இணைத்து ஒரு குழுவாக உருவாக்கி, அந்தக் குழுதான் ஊராட்சிகளில் கட்சியின் உத்தரவுகளை செயல்படுத்த வேண்டுமென்று முடிவெடுக்கப்பட்டது. அதன் எதிரொலியாகவே 12,617 பதவிகளை கட்சித்தலைமை காலி செய்துள்ளது. ஆனால், அனைவருக்கும் விரைவில் மாற்று பொறுப்பு வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளனர்.

panchayat secretary All posts appointed by Jayalalithaa

இந்த பதவிகளை மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 2008ம் ஆண்டு எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது கட்சியின் கீழ்மட்ட நிர்வாகிகளுக்கு குறிப்பாக கிராமப்புறங்களில் உள்ள கட்சி விசுவாசிகளுக்கு பதவி வழங்க ஜெயலலிதா முடிவெடுத்தார். அப்போது அவர் அறிவித்ததுதான் 12,670 ஊராட்சி செயலாளர்கள்பதவி. அவர் நியமித்த அத்தனை பதவிகளையும் ஒரே கையெழுத்தில் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் நீக்கியுள்ளனர். இந்த முடிவால் பதவி இழந்த நிர்வாகிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Follow Us:
Download App:
  • android
  • ios